இக்னேஷியஸ் டெலோஸ் ஃப்ளோரா மேஜர் ஜெனரலாக பொறுப்பேற்று கொண்டதை பாராட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்திருந்தார். அவர் குறிப்பிட்டிருந்த ட்வீட்டை ராணுவம் நீக்கியுள்ளதன் பின்னணி என்ன என்று எம்.பி.கனிமொழி எழுப்பியுள்ளார்.


தமிழ்நாட்ட்டின் கன்னியாகுமரியைச் சேர்ந்த முதல் பெண் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற இக்னேஷியஸிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது  ராணுவம்  (@NorthernComd_IA) வெளியிட்டிருந்த அறிவிப்பை Quote Tweet செய்து வாழ்த்து தெரிவித்திருந்தார். மேஜர் பதவி உயர்வு குறித்து டிவிட்டரில் ராணுவம் வெளியிட்ட பதிவை சுட்டிக்காட்டி இன்று (02/08/2023) நண்பகல் 12.32 மணிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். 






முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவீட்


”பெண்களால் முன்னேறக் கூடும் - நம் வண்தமிழ் நாடும் எந்நாடும்! என்று குறிப்பிட்டு கன்னியாகுமரியைச் சேர்ந்த இக்னேஷியஸ் டெலோஸ் ஃப்ளோரா இந்திய ராணுவத்தின் மதிப்பிற்குரிய பொறுப்பை எட்டியது நம்பமுடியாத மைல்கல்.அவரது திறமைமிக்க சாதனைக்கு வாழ்த்துகள்.” என்று குறிப்பிட்டிருந்தார்.



எம்.பி.கனிமொழி கேள்வி


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவிட்ட டிவீட் நீக்கப்பட்டது குறித்து எம்.பி.கனிமொழி தனது ட்விட்டரில்,”தமிழ்நாடு முதலமைச்சர், தனது மாநிலத்திலிருந்து முதல் பெண்மணியாக மேஜர் ஜெனரல் பதவி உயர்வு பெற்றிருப்பவருக்கு வாழ்த்திய பதிவை ஏன் நீக்க வேண்டும்? இதன் பின்னணி என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். 






இந்திய ராணுவம் ட்வீட்டை நீக்கியிருப்பது சர்ச்சையாகியுள்ளது. இதற்கு விளக்கம் அளிக்குமாறு எம்.பி.கனிமொழி கேட்டுக்கொண்டுள்ளார்.