மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரை எந்த தடையும் இல்லாமல் எப்போதும் இழிவாக பேசுபவர்கள் கருத்து சுதந்திரம் என ஓலமிடுகிறார்கள் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.


நீதிபதி பி.என்.ஸ்ரீகிருஷ்ணா பேட்டி


பத்திரிகை ஒன்றில் ஓய்வு பெற்ற நீதிபதி பி.என்.ஸ்ரீகிருஷ்ணா அளித்த பேட்டி வெளியாகி இருந்தது. அதில் நீதிபதி பி.என். ஸ்ரீகிருஷ்ணா, சட்டம் மற்றும் நிர்வாக விஷயங்களில் தங்கள் தனிப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்த அரசு ஊழியர்களின் சுதந்திரம் குறித்த விவாதம் குறித்து பேசினார். பில்கிஸ் பானோ வழக்கில் கூட்டுப் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரின் விடுதலை அதிர்ச்சி அளித்தது என்று அவர் தெரிவித்தார்.



சூழல் சரியில்லை


அந்த பேட்டியில், "தற்போதுள்ள சூழல் சரியில்லை, பொது இடத்தில் நின்று எனக்கு பிரதமரை பிடிக்கவில்லை என்று சொன்னால், நான் உடனடியாக சோதனையிடப்படலாம், கைது செய்யப்படலாம் அல்லது காரணமே இல்லாமல் சிறையில் அடைக்கப்படாலாம். நாட்டுமக்களாக அதை நாம் எதிர்க்க வேண்டும்", என்று கருத்து தெரிவித்து இருந்தார். இவருடைய இந்த கருத்துக்கள் வைரலாகி இருந்தன. 


தொடர்புடைய செய்திகள்: Swiggy இன்ஸ்டாமார்ட்.. அதிரடியாக அதிகரித்த ஆணுறை விற்பனை.. இந்த மாநிலத்துக்கு முதலிடம்..


அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதில்


ஓய்வு பெற்ற நீதிபதியின் இந்த கருத்துக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதில் கூறியுள்ளார். கிரண் ரிஜிஜூ தனது டிவிட்டரில் பக்கத்தில், ஓய்வு பெற்ற நீதிபதி கூறியதாக  வெளியான செய்தியை ஷேர் செய்து, ஒரு நீண்ட த்ரெட் போட்டிருந்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரை எந்த தடையும் இல்லாமல் எப்போதும் இழிவாக பேசுபவர்கள் கருத்து சுதந்திரம் என ஓலமிடுகிறார்கள் என்று கூறி இருந்தார்.



அவர் இருந்த இடத்திற்கு அவமானம்


அவரது பதிவில், "அவர்கள் ஒரு போதும் காங்கிரஸ் கட்சியால் விதிக்கப்பட்ட எமெர்ஜென்சி பற்றி பேச மாட்டார்கள், சில மாநில கட்சி முதல்வர்களை விமர்சிக்க ஒரு போதும் துணிய மாட்டார்கள். உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான அவர் இதை உண்மையாக சொன்னாரா என்பது எனக்கு தெரியாது. அது உண்மையாக இருந்தால், அந்த அறிக்கையே அவர் பணியாற்றிய இடத்தை இழிவுப்படுத்துகிறது", என எழுதி இருந்தார். இதற்கிடையில், பில்கிஸ் பானோ வழக்கின் குற்றவாளிகளின் விடுதலையைப் கேள்விப்பட்டதும் ஒரு பெண்ணாகவும், அரசு ஊழியராகவும், நம்பிக்கையின்றி அமர்ந்திருப்பதாகக் கூறுகிறார் மக்கள் அதிகாரி என்று அழைக்கப்படும் ஸ்மிதா சபர்வால். 2001-ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான இவர் மேலும், "அச்சமின்றி சுதந்திரமாக சுவாசிக்கும் அவளது உரிமையை நாம் மீண்டும் கொடுக்க முடியாது, இதனிடையில் நம்மை ஒரு சுதந்திர தேசம் என்று அழைத்துக்கொள்கிறோம்", என்று ட்வீட் செய்திருந்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.