ஜோதிடர் ஒருவர் விபத்து தொடர்பாக இழப்பீடு கோரி தாக்கல் செய்த வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்து ஒன்று விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்த வழக்கைத் தொடர்ந்த ஜோதிடர் பற்றிய விவரம் ஏதும் வெளியாகவில்லை. ஆனால் இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இவ்வாறாக கிண்டல் தொனியில் கருத்து தெரிவித்ததாக பல்வேறு ஊடகங்களும் செய்தி வெளியிட அதனை மேற்கோள் காட்டி நெட்டிசன்கள் கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர். 


”ஒரு ஜோதிடருக்கு விபத்து நேர்ந்தது என்பது ஆச்சரியமாக உள்ளது நாங்கள் அவரின் நட்சத்திர பலாபலனை சோதிக்கிறோம்...” என்று உச்சநீதிமன்றம் கூறியதாக தகவல்.






இதற்கு நெட்டிசன்கள் கொடுத்த ரியாக்‌ஷன்கள் சில சிரிக்கவைக்கின்றன. சில சிந்திக்க வைக்கும் ரகமாக இருக்கின்றன.


இதற்கு எதிர்வினையாற்றியுள்ள ட்விட்டராட்டி ஒருவர், என்ன கேள்வி இது? இவர்கள் மனிதர்கள் தானா? இதே போன்றதொரு கேள்வியை இவர்கள் ஒரு மருத்துவர், பொறியாளர் அல்லது வேறு தொழிலில் இருப்பவர்கள், ஏன் ஒரு சக நீதிபதியிடம் கேட்பாளர்களா? நீதி கேட்க வந்தவரை இப்படியா நடத்துவது என்று கொந்தளித்துள்ளார்.


மற்றொருவர், நல்ல ஜோக் என்று லைட்டர் வெயினில் எடுத்துக் கொண்டு கடந்து சென்றிருக்கிறார்.






இன்றைய தினம் உச்சநீதிமன்றம் மூன்று முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2021 சாவ்லா பாலியல் பலாத்கார வழக்கில்  குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று பேரை விடுவித்துள்ளது. 19 வயது பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் இவர்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியிருந்தது. ஆனால் மூவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தனக்கு எதிரான உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடர்ந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்றது.


அதுமட்டுமல்லாது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு சட்டத்திருத்தம் செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது.