Whatsapp Update: வாட்ஸ்-அப் சாட் ஹிஸ்டரியை ஒரு போனிலிருந்து மற்றொரு போனிற்கு எளிமையாக மாற்றிக் கொள்வதற்கு, புதிய அப்டேட்டை மெட்டா நிறுவனம் வழங்கி உள்ளது.
வாட்ஸ் அப்
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்-அப் செயலி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், போட்டி செயலிகளிடம் வீழ்வதை தவிர்க்கும் வகையிலும், பயனாளர்களே போதும் போதும் என கூறும் அளவிற்கு தொடர்ந்து பல்வேறு அப்டேட்களை வாரி வழங்கி வருகின்றன
மெட்டா குழுமத்தின் வாட்ஸ்-அப் நிறுவனம் தனது பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதற்காக தொடர்ந்து அடுத்தடுத்து அப்டேட் மீது அப்டேட்டாக வழங்கி கொண்டிருக்கிறது. ஆனாலும், வாட்ஸ்-அப் செயலியை பயனாளிகள் மேலும் மேலும் எளிமையாக அணுகும் வகையில், அது தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது.
புதிய அப்டேட்
அந்த வரிசையில், தற்போது வாட்ஸ்-அப் சாட் ஹிஸ்டரியை ஒரு போனிலிருந்து மற்றொரு போனிற்கு எளிமையாக மாற்றிக் கொள்வதற்கு, புதிய அப்டேட்டை மெட்டா நிறுவனம் வழங்கி உள்ளது. வாட்ஸ்-அப் செயலியில் உள்ள சாட் ஹிஸ்டரியை ஆண்ட்ராய்ட் போனிலிருந்து ஐஓஎஸ்-ற்கும் அதிலிருந்து மற்றொரு ஐஓஎஸ்-ற்கும் மாற்றும் வசதி கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதைதொடர்ந்து தற்போது, ஆண்ட்ராய்ட் போனில் உள்ள வாட்ஸ்-அப் சாட் ஹிஸ்டரியை வேறொரு ஆண்ட்ராய்ட் போனிற்கு மாற்றிக்கொள்ளும் புதிய வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
பயனாளர்கள் புதிய ஆண்ட்ராய்ட் போனிற்கு தங்களது வாட்ஸ்-அப் கணக்கை மாற்றினால், உடனடியாக கூகுள் டிரைவின் உதவியுடன் தங்களது பழைய போனில் உள்ள சாட் ஹிஸ்டரியை புதிய ஸ்மார்ட் போனிற்கு பரிமாறிக்கொள்ளும் வசதி இருக்கிறது. அதற்கு அதிக நேரமும் எடுத்துக்கொள்ளும். இதனை எளிமையாக்கும் வகையில், சாட் ஹிஸ்டரி பரிமாற்றத்தை தொடங்க முதலில் க்யூஆர் கோடை முதலில் ஸ்கேன் செய்ய வேண்டும். பின்பு அடுத்தடுத்து கொடுக்கப்படும் வழிமுறைகளை பின்பற்றி எளிதில் தரவுகளை பரிமாறிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து வரும் அப்டேட்: