நாடு முழுவதும் நாளை 75ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. கொரோனா பாதிப்பு இன்னும் உள்ளதால் இம்முறை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடம் சுதந்திர தினம் கொண்டாட்டம் இயல்பைவிட சற்று குறைவாக தான் இருக்கும். எனினும் இது 75ஆண்டின் தொடக்கம் என்பதால் இம்முறை சுதந்திர தின கொண்டாட்டம் மிகவும் கவனம் பெற்றுள்ளது. சரியாக 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. அப்போது முதல் முறையாக இந்திய தேசிய கோடிக்கு பிரதமர் நேரு மரியாதை செலுத்தினார். 


இந்நிலையில் சுதந்திர தினம் எப்படி ஆகஸ்ட் 15ஆம் தேதி வந்தது? அதன் பின் உள்ள வரலாறு என்ன?


பிரிட்டிஷ் கிழக்கு இந்தியா கம்பெனி 18ஆம் நூற்றாண்டில்  இந்தியாவில் வணிகம் செய்ய வந்தது. வணிகத்திற்கு வந்த அந்த கம்பெனி பிறகு மெல்ல வரி வாங்கும் அதிகாரம் மற்றும் மன்னர்களின் அதிகாரங்களில் தலையிடல் என இருந்தது. அதன்பின்பு ஒரு சில பகுதிகளில் முழு ஆட்சிப் பொறுப்பையும் கைப்பற்றியது. கடைசியாக மொத்த நாட்டையும் கிழக்கு இந்தியா கம்பெனி சார்ந்த நபர்கள் தங்கள் கட்டிப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். பிரிட்டிஷ் அரசும் இந்தியாவில் நிர்வாகத்தை மெல்ல கிழக்கு இந்தியா கம்பெனியிடமிருந்து கைப்பற்றி முழுமையாக இந்தியாவை தன்னுடைய காலனி ராஜியங்களில் ஒன்றாக மாற்றியது. 


பிரிட்டிஷ் அரசின் கொடுங்கோள் ஆட்சியில் இருந்து இந்தியாவை மீட்க சுதந்திர போராட்ட வீரர்கள் பல போராட்டங்களை முன்னேடுத்தனர். 1857 சிப்பாய் கழகம் பெரிய போராட்டமாக இருந்தது. அதன்பின்னர் பிரிட்டிஷ் அரசின் அணுகுமுறையில் சில மாற்றங்கள் தெரிந்தது. இந்தியர்களை மதம் வாரியாக பிரித்து ஆள பிரிட்டிஷ் அரசு முற்பட்டது. 1905ஆம் ஆண்டு அமல்படுத்த பெங்கால் பிரிவினை அதற்கு ஒரு பெரிய சான்று. அதன்பின்பும் முஸ்லீம் லீக் கட்சி தொடங்கப்பட்ட பிறகும் இதே துருப்புச் சீட்டை பிரிட்டிஷ் அரசு கையில் எடுத்தது. 1920ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தில் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இணைந்து போராடினார்கள். அப்போது கிலாஃபத் விஷயம் இந்து-இஸ்லாமியர்களை ஒன்று சேர்த்தது. 




அதன்பின்னர் 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற உப்பு சத்தியாகிரகம், 1942ஆம் ஆண்டு நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியவற்றிலும் ஒரு சார்பு இஸ்லாமியர்கள் ஒன்றாக இருந்தனர். 1946ஆம் ஆண்டு முகமது அலி ஜின்னா பாகிஸ்தான் நாடு கோரிக்கையை முன்னெடுத்தார். இதற்கு பிறகு பெரிய கலவரம் வெடித்தது. குறிப்பாக கொல்கத்தா பகுதியில் பெரியளவில் கலவரம் இருந்தது. இதனால் இந்தியாவை இரண்டாக பிரிப்பது என்று பிரிட்டிஷ் அரசு முடிவு எடுத்தது. டெனியல் ரேட்கிளிஃப் தலைமையில் எல்லையை நிர்ணயிக்க குழு அமைத்தது. அவர் இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கான எல்லையை நிர்ணயித்தார். ஆகஸ்ட் 14ஆம் தேதி 1947ஆம் ஆண்டு பாகிஸ்தான் நாடு உருவாக்கப்பட்டது. ஆகஸ்ட் 15ஆம் தேதி 1947 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சுதந்திரம் அளிக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக நேரு பதவியேற்றார். 


மேலும் படிக்க: உள்நாட்டு விமானப் பயணக் கட்டணங்கள் உயர்வு.. முழு விவரமும் இங்கே!