2016ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி பிரதமர் மோடி அறிவித்த ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு ஒட்டுமொத்த இந்தியாவையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதன் தாக்கம் இந்தியா முழுவதும் எதிரொலித்தது.


இந்த நிலையில், பணமதிழப்பிழப்பிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளின் இறுதித் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் பெண் நீதிபதியான பி.வி.நாகரத்னா மட்டும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை சட்டத்திற்கு உட்பட்டு நடந்தாலும் சட்டவிரோதம் என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கினார்.




அவர் வழங்கிய தீர்ப்பில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி வழங்கிய கருத்தை பரிந்துரை என ஏற்க முடியாது. ரிசர்வ் வங்கிக்கு அத்தகைய அதிகாரம் இருப்பதாக வைத்துக்கொண்டாலும், அத்தகைய பரிந்துரை செல்லாது. பயங்கரவாத நிதி, கள்ளநோட்டு போன்றவற்றை ஒழிக்க திட்டமிடப்பட்டது என்றாலும் இந்த நடவடிக்கை முற்றிலும் சட்ட அடிப்படையில் சட்டவிரோதம் என்றார்.


நீதிபதி பி.வி.நாகரத்னா 1962ம் ஆண்டு அக்டோபர் 30-ந் தேதி பிறந்தவர். கர்நாடகாவைச் சே்ந்தவரான இவர் பெங்களூரில் வழக்கறிஞராக பயிற்சி பெற்றார். 1987ம் ஆண்டு அக்டோபர் மாதம் 28-ந் தேதி வழக்கறிஞராக பதிவு செய்தார். வழக்கறிஞராக சிறப்புற பணியாற்றிய இவர் நீதிபதியாக பதவியேற்றார். பின்னர், 2008ம் ஆண்டு கர்நாடக உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு 2010ம் ஆண்டு கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.




பின்னர், அனுபவம் மற்றும் பணித்திறமை அடிப்படையில் அவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக 2021ம் ஆண்டு பிப்ரவரி 17-ந் தேதி நியமிக்கப்பட்டார். தற்போது, அவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பு வகித்து வருகிறார். நீதிபதி நாகரத்னாவின் தந்தை இ.எஸ்.வெங்கட்ராமையா 1989ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக 6 மாத காலம் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


பி.வி.நாகரத்னா வழங்கிய தீர்ப்புகளில், 2012ம் ஆண்டு ஒளிபரப்பு ஊடகங்களை கட்டுப்படுத்த தன்னாட்சி மற்றும் சட்டப்பூர்வ முறையை அமைக்க வேண்டு என்று அவர் மத்திய அரசை அறிவுறுத்தியது முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாகும்.


கடந்த 2019ம் ஆண்டு நாகரத்னா வழங்கிய தீர்ப்பில் கோயில் ஒரு வணிக நிறுவனம் அல்ல என்றும், அதன் ஊழியர்களுக்கு பணிக்கொடைச் சட்டத்தின் கீழ் கருணைத் தொகைக்கு உரிமை இல்லை என்றும், ஆனால் கர்நாடக இந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலையச் சட்டத்தின் கீழ் இதேபோன்ற பலன்களை பெறலாம் என்றும் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Demonetization: “அரசுக்குத்தான் விருப்பம்; ஆர்பிஐ நிறைவேற்றியது” - பணமதிப்பிழப்புக்கு ஒற்றை ஆளாக எதிர்ப்பு தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா!


மேலும் படிக்க: Demonetization: “நோக்கம் முக்கியம் கிடையாது; பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்” - அதிரடி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்