இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 61 ஆயிரத்து 500 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 கோடியே 47 லட்சத்து 88 ஆயிரத்து 109 ஆக அதிகரித்துள்ளது. 10 மாநிலங்களில் 78 சதவீத பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், டெல்லி, சத்தீஸ்கர், கர்நாடக, மத்தியப் பிரதேசம், குஜராத், கேரளா, தமிழ்நாடு, ராஜாஸ்தான் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். தொற்று பாதிப்பு மற்றும் அதிக இறப்புகளை கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது குறிப்பிடத்தக்கது.




 


இந்நிலையில், இந்தியாவில் இந்த வாரம் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 5.2 மில்லியனைத் தாண்டியுள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இந்த வாரம் இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு குறித்த நிலவரத்தை உலக சுகாதாரம் மையம் வெளியிட்டுள்ளது. அதன் விபரம்:


 


 11 ஏப்ரல்: 169,914 (பதிவானவை)


12 ஏப்ரல்: 160,838 (பதிவானவை)


13 ஏப்ரல்: 185,297 (பதிவானவை)


14 ஏப்ரல்: 199,584 (பதிவானவை)


15 ஏப்ரல்: 216,828 (பதிவானவை)


16 ஏப்ரல்: 234,002 (பதிவானவை)


17 ஏப்ரல்: 260,895 (பதிவானவை)


18  ஏப்ரல்: 275,196 (பதிவானவை)