பிப்ரவரி என்றாலே ரொமான்ஸுக்குப் பஞ்சமில்லை எனலாம். ஒருவாரம் முழுக்க காதலர்களுக்கான வேலண்டைன்ஸ் கொண்டாட்டம் முடிந்தது போக அடுத்தகட்டமாக ஆண்டி வேலண்டைன் வாரம் அனுசரிக்கப்படுகிறது. பிரிந்த காதலர்களுக்காக இந்த வாரம் அனுசரிக்கப்படுகிறது. அந்த வரிசையில் மிஸ்ஸிங் டே கொண்டாடப்படுகிறது. பிரிந்த காதலர் மட்டுமல்ல, சிங்கிள் ஸ்டேடஸில் இருப்பவர்கள், தனிமையையே தனது பார்ட்னராக்கிக் கொண்டவர்கள், தனது க்ரஷ்ஷை பார்ட்னராக்கிக் கொள்ளக் காத்திருப்பவர்கள் என அனைவரும் இந்த வாரத்தைக் கொண்டாடுகிறார்கள்.
 
அந்த வரிசையில் 20 பிப்ரவரி அன்று  மிஸ்ஸிங் டே அனுசரிக்கப்படுகிறது. அன்று பிரிந்து சென்ற தங்கள் அன்புக்குரியவர்கள் இல்லாததை நினைவுகூர ஒரு வாய்ப்பாகும். அந்த நாளில் தனது பார்ட்னருடன் பிரேக் அப் செய்தவர்கள், தனது இறந்துபோன பார்ட்னருக்காக இன்னனும் துக்கம் அனுசரிப்பவர்கள் என அனைவரும் பங்கேற்கலாம். 


மிஸ்ஸிங் டே அனுசரிப்பது எப்படி?


மிஸ்ஸிங் டே அனுசரிக்க, மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் நினைவுகளைப் பற்றி சிந்திக்க சிறிது நேரம் ஒதுக்கலாம். அன்றைய தினத்தில் அவர்கள் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கலாம் அல்லது அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் ஒரு பிரார்த்தனை செய்யலாம். சிலர் தங்கள் அன்புக்குரியவர்கள் இறுதியாக ஓய்வெடுக்கும் இடத்துக்குச் சென்று மலர்கள் தூவி அல்லது மலர்வளையம் வைத்து அல்லது நினைவுச் சின்னங்களை அவர்களுக்காக வைத்துப் பிரார்த்தனை மேற்கொள்வார்கள். 




தனது நேசிப்பவர்களுடன் பிரேக் அப் செய்தவர்களுக்கு இந்த நாள் அதில் தான் கற்றுக்கொண்ட பாடங்களைப் பற்றிச் சிந்திக்கவும், அதிலிருந்து ஒரு க்ளோஸர் (Closure) பெறவும் ஒரு வாய்ப்பாக இருக்கும். அவர்கள் தங்களுக்குள் பொத்தி வைத்திருக்கும் உணர்ச்சிகளை அழுகை கோபம் என எப்படியோ விடுவித்து, தங்களுக்கான அமைதியைத் தேடும் வாய்ப்பாக இந்த நாளை அனுசரிக்கலாம்.


கூடுதலாக, மிஸ்ஸிங் டே தனிமைப்படுத்தப்பட்டவர்களை அணுகுவதற்கான ஒரு சந்தர்ப்பமாக இருக்கலாம். நம் இழந்த நபர்கள் ஒரு பக்கம் இருந்தாலும் நம் வாழ்வில் இன்னமும் இருக்கும் நபர்களை நமக்கு அன்பு செலுத்தும் மனிதர்களைப் போற்றும் நாளாக இந்த நாளைக் கொண்டாடலாம். 


மிஸ்ஸிங் டே சோகத்துக்கான தினம் அல்ல உண்மையில் அது உறவின் வலிமையை உணர்ந்துகொள்வதற்கான தினம். எத்தனை உறவுகள் வந்தாலும் போனாலும் நம்முடன் உரமாகவும் வரமாகவும் ஒட்டிக்கொண்டிருப்பவர்கள் வாய்க்கப்பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.அத்தகைய நபர்கள் உங்கள் வாழ்வில் இருந்தால் நீங்களும் அதிர்ஷ்டசாலிகள் என்பதை உங்களுக்கு நினைவூட்டும் முக்கியமான நாள் இந்த மிஸ்ஸிங் டே.. இனி எதை மிஸ் செய்தாலும் அது போன்ற மனிதர்களை மட்டும் எக்காரணத்தைக் கொண்டும் இனி உங்கள் வாழ்க்கையில் மிஸ் செய்யக் கூடாது என்பதற்கான தினம் இது.