குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் சிங்கத்தின் பிடியில் இருந்து விவசாயி ஒருவர் தனது கன்றுக்குட்டியை காப்பாற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


 குஜராத்தில் இருந்து  65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோடினார் தாலுகாவில் உள்ள அலிதார் கிராமத்திற்கு அருகே இந்த சம்பவம் நடந்ததாக பாஜக தலைவரும், கேஷோத் நகராட்சி உறுப்பினருமான விவேக் கோடாடியா ட்விட்டரில் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். காரின் ஜன்னலில் இருந்து படம் பிடிக்கப்பட்ட அந்த வீடியோவில், ஒரு கன்றுக்குட்டி தன்னைப் பிடித்த சிங்கத்தில் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறது. சிங்கம் அதன் வலிமையான பற்களை கொண்டு மாட்டின் கழுத்தை இறுக பற்றி இருந்தது. அந்த பிடியில் இருந்து தப்பிக்க முயற்சித்த கன்றுக்குட்டி சாலையின் இருபுறமும் அங்குமிங்கும் நடக்கிறது. 


தொடர்ந்து, மாட்டின் உரிமையாளர் சம்பவ இடத்திற்கு வந்து சிங்கத்தை சத்தமிட்டு விரட்ட முயன்றார். சிங்கம் இன்னும் தன் இரையை விட மறுத்த நிலையில், அவர் ஒரு கல்லை எடுத்துக்கொண்டு இரண்டு விலங்குகளை நோக்கி நடந்தார். 



கல்லெறிந்து விட்டு அவர் அருகில் வருவதை பார்த்த சிங்கம் பசுவை விட்டுவிட்டு சாலையோர புதருக்குள் ஓடியது. 


இச்சம்பவம் அலிதார் கிராமத்தின் புறநகரில் நடந்ததாக எல்லை வன அதிகாரி அசோக் அமீன் தெரிவித்தார். “சிங்கங்கள் அலிடரைச் சுற்றியுள்ள பகுதியை தங்கள் நிரந்தர வீடாக மாற்றியுள்ளன. சிங்கங்கள் மனிதக் குடியிருப்புகளைச் சுற்றித் திரிவதைக் காட்டும் காணொளிகள் தொடர்ந்து வெளிவருகின்றன


வீடியோவில் உள்ள துணிச்சலான மாட்டின் உரிமையாளர் கிரித்சிங் சவுகான் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.