இந்தியாவில் பயனர்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் மே மாதத்தில் 19 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை வாட்ஸ்அப் முடக்கியுள்ளது. வாட்ஸ்அப்பால் வெளியிடப்பட்ட சமீபத்திய மாதாந்திர அறிக்கையின்படி இது உறுதி செய்யப்பட்டுள்ளது. 


கடந்த ஆண்டு நடைமுறைக்கு வந்த புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, ஒவ்வொரு மாதமும் இணக்க அறிக்கைகள், பெறப்பட்ட புகார்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்களைக் பெரிய டிஜிட்டல் தளங்கள் (அதாவது 50 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள் கொண்டிருக்க வேண்டும்) வெளியிட வேண்டும்.


 






இதுகுறித்து வாட்ஸ்அப் செய்திதொடர்பாளர் கூறுகையில், "சமீபத்திய மாதாந்திர அறிக்கையில் வெளியாகியுள்ள தகவலின்படி, மே மாதத்தில் வாட்ஸ்அப் 1.9 மில்லியன் கணக்குகளை முடக்கியுள்ளது. பயனர்-பாதுகாப்பு அறிக்கையில், பெறப்பட்ட பயனர் புகார்களின் விவரங்கள், வாட்ஸ்அப் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கை, தானாக முன் வந்து எடுத்த தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.


வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, "மே 1 முதல் மே 31, 2022 வரை 19.10 லட்சம் இந்தியக் கணக்குகள் வாட்ஸ்அப் நிறுவனத்தால் முடக்கப்பட்டுள்ளது. பயனர்களிடமிருந்து பெறப்பட்ட எதிர்மறையான கருத்துக்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையும் இதில் அடங்கும். ஏப்ரல் மாதத்தில் 16 லட்சத்திற்கும் அதிகமான இந்திய பயனர்களின் கணக்குகளையும், மார்ச் மாதத்தில் 18.05 லட்சம் கணக்குகளையும் வாட்ஸ்அப் தடை செய்துள்ளது.


பயனர்களை எங்கள் தளத்தில் பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக, செயற்கை நுண்ணறிவு, பிற அதிநவீன தொழில்நுட்பம், தரவு விஞ்ஞானிகள், நிபுணர்கள் ஆகியோரை பல ஆண்டுகளாக பணிகளில் ஈடுபடுத்தியுள்ளோம். மே 2022 இல் 528 புகார் அறிக்கைகள் பெறப்பட்டன. மேலும் 24 கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டன.


பெறப்பட்ட மொத்த அறிக்கைகளில், 303 புகார்கள் கணக்குகளை தடை செய்யக் கோரி வந்திருந்தன. மற்றவை வாடிக்கையாளர் உதவி, பாதுகாப்பு ஆகியவை தொடர்பானவை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


பொய் புகார்களை தவிர, பெறப்பட்ட அனைத்து புகார்களுக்கும் நாங்கள் பதிலளிப்போம். புகாரின் விளைவாக ஒரு கணக்கு தடைசெய்யப்பட்டாலோ அல்லது முன்பு தடைசெய்யப்பட்ட கணக்கு மீட்டெடுக்கப்பட்டாலோ அது நடவடிக்கையாக கருதப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண