கேரள மாநிலத்தில் திருச்சூர் பகுதியைச் சேர்ந்த நபர் வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பால் நேற்று உயிரிழந்தார். கடந்த 2019-இல் 6 வயது சிறுவன் இதே வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார்.  வெஸ்ட் நைல் வைரஸ் ஆலப்புழை பகுதியில் 2006-ஆம் ஆண்டு முதன் முதலில் கண்டறியப்பட்டது.


பின்னர், 2011-ஆம் ஆண்டில் எர்ணாகுளம் பகுதியில் இந்த வைரஸால் உயிரிழந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. தற்போது, கேரளாவில் வெஸ்ட் நைல் வைரஸ் பரவல் காரணமாக ஒருவர் உயிரிழந்திருப்பது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெஸ்ட் நைல் வைரஸ் தொற்றுக்கான காரணம் என்ன? அதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் உள்ளட்டவைகள் குறித்து கீழே காண்போம்.


அதென்ன வெஸ்ட் நைல் வைரஸ்? (West Nile Virus)


வெஸ்ட் நைல் வைரஸ், குளெக்ஸ் (Culex ) என்ற வகை கொசுக்கள் மூலம் பரவுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட கொசுக்களிடமிருந்து மனிதர்கள், விலங்குகள் மற்றும் பறவைகள் என பரவும்தன்மையை கொண்டிருக்கிறது. இது Flaviviridae வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த நைல் வைரஸ் தாக்கிய பறவைகளின் ரத்தத்தை குடிக்கும் கொசுக்களுக்கு வைரஸ் தொற்றிகொள்கிறது. பின்னர், அது மனிதர்களிடம் பரவுகிறது. இந்த வைரஸ் பாதிக்கப்படுபவரின் ரத்தத்தில் கலந்து உடல்நிலையில் கோளாறுகளை ஏற்படுத்துகிறது.


வெஸ்ட் நைல் வைரஸ் இரத்தம் பரிமாற்றம் செய்யப்படும்போது மற்றரையும் பாதிக்கிறது. அதாவது கருவுற்றிருக்கும் தாய் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், அது குழந்தையையும் பாதிக்கும். இரத்த தானம் செய்பவர் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், அதன் மூலம் யாருக்கு அவரின் இரத்தம் பயன்படுத்தப்படுகிறதோ, அவருக்கு தொற்று அபாயம் ஏற்படும். ஆனால், இந்த வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவருடம் அருகில் இருந்தோலோ, பேசினாலோ, மற்ற மனிதருக்கு, விலங்கிற்கு இது பரவாது. புரியும்படி சொல்லவேண்டுமானால், இது கொரோனா தொற்று போல் அல்ல. காற்றிலோ, தொற்று ஏற்பட்டவருடன் பேசினாலோ பரவாது என்கிறது உலக சுகாதார அமைப்பு.  இதுவரை மனிதன் மூலம் இந்த தொற்று பரவியதற்கான சான்றுகள் ஏதுமில்லை. 


இது கொசுக்கள் மூலம் அதிகம பரவக்கூடியது என்கிறார்கள் மருத்துவர்கள். 


வெஸ்ட் நைல் வைரஸ் அறிகுறிகள் என்ன?


இந்த வைரஸ் மிகவும் ஆபத்தானது என்று சொல்வதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், நோய் தொற்றின் அறிகுகள் எதுவும் இருக்காது. வெஸ் நைல் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு 80% அறிகுகள் ஏதும் வெளிப்படாது என்பதே உண்மை. 20% தான் அறிகுறிகள் தெரிய வாய்ப்பிருக்கிறது. அதுவும், இந்த தொற்று உடலில் தீவிரமாக பரவில், வைரஸ் நன்றாக பெருக்கம் அடைந்த பின்னரே காயச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும். 


இது தீவிரமடைந்தால் காய்ச்சல், தலைவலி, மயக்கம், பார்வை இழப்பு, வாந்தி, சரும பாதிப்புகள், உடல் வலி, swollen glands போன்ற பாதிப்புகள் ஏற்படும். இதுவே இந்த தொற்றின் அறிகுறிகள்.


இந்த வைரஸ் தாக்குதல் தீவிரமாக பாதிக்கப்பட்ட 150 பேரில் ஒருவருக்கு மத்திய நரம்பு மண்டலம் கடுமையாக பாதிக்கப்படும் என்பது உறுதி. என்செபாலைட்டிஸ்  (encephalitis),  மெனிஞ்சைட்டிஸ் (meningitis)  உள்ளிட்ட கடுமையான பாதிப்புகளும் ஏற்படும். முடக்குவாதம் உள்ளிட்டவைகளும் இதனால் ஏற்படும் விளைவுகள். வைரஸ் தொற்று மிகவும் தீவிரமானால் இறுதியில் மரணம்தான். 



வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுப்பது எப்படி?


கொசுக்கள் மூலம் அதிகம் பரவும் வைரஸ் என்பதால், கொசு கடியில் இருந்து தப்பிக்க என்னென்ன வழிகள் இருகிறதோ அதை செய்யலாம். உங்கள் வீட்டில் கொசுக்கள் வரமால் பார்த்துகொள்ளவும். கொசு அதிகம் இருக்கும் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். வீடுகள், அலுவலகம் உள்ளிட்டவைகள் அருகே தண்ணீர் தேங்க விடக்கூடாது. உங்களை கடிக்கும் கொசு வெஸ்ட் நைல் வைரஸை தாங்கி வரும் ஆபத்து அறிந்து விழிப்புடன் இருப்பதே உங்களை இதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும். 


கொசு கடியிலிருந்து தப்பிக்கும் வகையில் ஆடைகள் அணியலாம். நீங்கள் வளர்க்கும் பறவைகள் இறந்தால் அவைகளை வெறும் கைகளால் தொட வேண்டாம். 


வெஸ்ட் நைல் வைரஸ் பெயர் எப்படி வந்தது?


இந்த வைரஸ் 1937 ஆம் ஆண்டு உகாண்டாவைச் சேந்த ஒரு பெண்ணிடம் கண்டறியப்பட்டது. பின்னர், 1953 ஆம் ஆண்டில் மேற்கு நைல் டெல்டா பகுதியில் உள்ள காக்காவிடம் இது கண்டறியப்பட்டது. அதனால், ஊரின் பெயரில் இந்த வைரஸ் அழைக்கப்பட்டு வருகிறது. இதன் அறிவியல் பெயர் Flaviviridae; Flavivirus ஆகும்.