18 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் தனக்கு மாநிலங்களவையில் வாய்ப்பு வழங்கப்படாதது ஏன் என ட்விட்டரில் பகிரங்கமாக கேள்வி எழுப்பியுள்ளார் நக்மா.


இந்தியா முழுவதும் 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலங்களுக்க தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் வரும் ஜூன் 10-ந் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் தங்களின் வேட்பாளர்களின் பட்டியலை நேற்று அறிவித்தது. அதில்  நடிகையும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான நக்மாவின் பெயர் இடம்பெறவில்லை. இந்த முறை நக்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஒதுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தனக்கு மாநிலங்களவையில் வாய்ப்பு வழங்கப்படாதது ஏன் என ட்விட்டரில் பகிரங்கமாக கேள்வி எழுப்பியுள்ளார் நக்மா.






தனது அதிருப்தியை ட்விட்டரில் தெரிவித்துள்ள நக்மா, ''2004ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேரும்போது தனக்கு மாநிலங்களவை எம்பி பதவி கொடுக்கப்படுமென சோனியா காந்தி உறுதி அளித்தார்.மகாராஷ்டிராவில் இருந்து தற்போது வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள இம்ரானை விட தான் எந்த விதத்தில் தகுதி குறைந்தவளாக இருக்கிறேன்'' எனக் குறிப்பிட்டுள்ளார்


ப.சிதம்பரம்


தமிழ்நாட்டிலுள்ள 6 மாநிலங்களவை இடத்திற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 3ல் திமுக கட்சி போட்டியிடுகிறது. திமுக தன்னுடைய கூட்டணியிலுள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடத்தை ஒதுக்கீடு செய்திருந்தது. இந்த இடத்திற்கான வேட்பாளர் யார் என்பதில் நீண்ட இழுபறி நீடித்து வந்தது. டெல்லியில் காங்கிரஸ் தலைமையின் ஒப்புதலை அடுத்து நேற்று முன் தினம் டெல்லியில் இருந்து சென்னை வந்த ப.சிதம்பரம், சென்னையில் உள்ள தனது வீட்டில் 10 எம்.எல்.ஏக்களின் கையெழுத்தோடு வேட்புமனுவை தயார் செய்தார்


வேட்புமனுத் தாக்கல்


இந்நிலையில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தமிழ்நாட்டில் நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. வேட்புமனு தாக்கல் செய்ய வரும் நாளை கடைசி நாள் என்பதால் இன்று தன்னுடைய வேட்புமனுவை ப.சிதம்பரம் தாக்கல் செய்யவுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண