Gaganyaan Mission Test: ககன்யான் திட்டத்தின் முக்கிய அங்கமான விண்கலத்தில் இருந்து வீரர்கள் பாதுகாப்பாக வெளியேறுவது தொடர்பான பரிசோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது.


ககன்யான் திட்டம்:


இஸ்ரோவின் மனிதனை விண்வெளிக்கும் அனுப்பும் திட்டம் தான் ககன்யான். 2025ம் ஆண்டு செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்திற்கான பணிகள், தற்போது அதிவேகமாக நடைபெற்று வருகிறது. அதன் மிக முக்கிய நிலையாக கருதப்படும் விண்வெளியில் இருந்து புவிக்கும் திரும்பும் வீரர்களை, பத்திரமாக தரையிறக்கும் பணி தொடர்பான பரிசோதனையை இஸ்ரோ மேற்கொண்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, டிவி-டி1 என்ற பரிசோதனை விண்கலம் காலை 10 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது. தொடர்ந்து, திட்டமிட்டபடி குறிப்பிட்ட இலக்கை அடைந்த பிறகு, விண்கலத்தில் இருந்து பிரிந்த எஸ்கேப் பாட் திட்டமிட்டபடி கடலில் தரையிறங்கியது. இது ககன்யான் திட்டத்தில் முக முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.


பரிசோதனையில் நடந்தது என்ன?  



  • டிவி-டி1 என்ற ஒற்றை-நிலை திரவ ராக்கெட் திட்டமிட்டபடி சரியாக 10 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது

  •  விண்கலம் 11.8 கிமீ உயரத்தை எட்டியபோது க்ரூ ஒலியை விட அதிவேகமாக அதவாவது மேக் எண் 1.25 வேகத்தில் பயணிக்க தொடங்கியது. ( மேக் எண் 1 = மணிக்கு 1225 கிலோ மிட்டர் வேகம்)

  • இதையடுத்து உயர்  ஆற்றல் மோட்டார் (High Energy Motor) செயல்படுத்தப்பட்டு விண்கலம் மேலும் வளிமண்டலத்திற்குள் கொண்டு செல்லப்பட்டது

  • விண்ணில் செலுத்தப்பட்ட 61.1 விநாடிகளுக்குப் பிறகு 11.9 கிலோ மீட்டர் உயரத்தில் ஒலியை காட்டிலும் அதிக வேகத்தில் அதாவது மேக் எண் 1.21 வேகத்தில் விண்கலம் பயணித்தது

  • அப்போது ராக்கெட் பூஸ்டரிலிருந்து க்ரூ எஸ்கேப் சிஸ்டம் வெளியேறியது

  • இதையடுத்து 16.9 கிலோ மீட்டர் உயரத்தில் க்ரூ மாடுலே எனப்படும் மனிதர்கள் அமரக்கூடிய பாகம், க்ரூ எஸ்கேப் சிஸ்டத்திலிருந்து தனியாக பிரிந்தது

  • அங்கிருந்து மணிக்கு 550 கிலோ மீட்டர் வேகத்தில் க்ரூ மாடுலே புவியை நோக்கி பயணிகக் தொடங்கியது. பின்பு பாரசூட் உதவியுன்  வேகம் கட்டுப்படுத்தப்பட்டு க்ரூ மாடுலே திட்டமிட்டபடி கடலில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. அதனை மீட்டு வந்து பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட உள்ளன. இதன் மூலம் பரிசோதனை திட்டமிட்டபடி நடைபெற்றதாகவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.  


க்ரூ எஸ்கேப் சிஸ்டம் என்றால் என்ன?


அபார்ட் மற்றும் க்ரூ எஸ்கேப் சிஸ்டம்ஸ், போர் விமானங்களில் உள்ள எஜெக்ஷன் இருக்கைகளைப் போன்றது.  இது விண்வெளிப் பயணத்தின் போது விண்வெளி வீரர்களுக்கான முக்கிய பாதுகாப்பு அம்சமாக கருதப்படுகிறது.  இந்த அமைப்பு தானாகவே இயங்குகிறது. விண்கலம் தனது பயணத்தை தொடங்கிய சில நிமிடங்களில் கோளாறுகள் அல்லது சிக்கல்களை கணினி கண்டறிவதன் மூலம், தானியங்கி முறையில் இந்த எஜெக்‌ஷன் சிஷ்டம் தூண்டப்படுகிறது. இது ஒரு புதிய தொழில்நுட்பம் இல்லை என்றாலும், விண்வெளி பயணம் மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர்களுக்கு இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ராக்கெட்டின் பயணம் தொடங்கும்போது ஏதேனும் அசம்பாவ்டிதங்கள் ஏற்பட்டால், உடனடியாக அவர்களை காப்பாற்றும் நோக்கில் இந்த அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில் விண்கலத்தில் ஏதேனும் ஆபத்துஇ கண்டறியப்பட்டால், உடனடியாக ஆராய்ச்சியாளர்கள் இருக்கும் க்ரூ மாடலே தனியாக பிரிக்கப்பட்டு பாரசூட் மூலம் கடலில் தரையிறக்கும் பணியை தான் இஸ்ரோ தற்போது வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.


மோட்டார்கள் கண்காணிப்பு:


இந்த பணியின் போது பயன்படுத்தப்படும் மோட்டார்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டுள்ளன.  அதன்படி, லோ ஆல்டிட்யூட் மோட்டார், ஹை ஆல்டிட்யூட் மோட்டார் மற்றும் அவசரகாலத்தில் வாகனத்தில் இருந்து விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு பயன்படுத்தப்படும் ஜெட்டிசனிங் மோட்டார் ஆகியவற்றின் செயல்பாடும் திட்டமிட்டபடிஇருந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த ஆய்வின் மூலம் கிடைத்த தரவுகள், ககன்யான் திட்டத்தை பாதுகப்பாக செய்ல்படுத்த உதவும் என கூறப்பட்டுள்ளது.