SMILE Scheme: நல்ல திட்டமா இருக்கே.! யாசகம் எடுப்பவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் ஸ்மைல் திட்டம்.!

தமிழ்நாட்டில் உள்ள 6 நகரங்களில் ஸ்மைல்  துணைத் திட்டமானது இடம்பெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது

Continues below advertisement

ஸ்மைல் திட்டம்:

Continues below advertisement

விளிம்புநிலை நபர்களுக்கான ஆதரவு அளிக்கும் வலையிலான, ஸ்மைல் என்கிற திட்டத்தை மத்திய  சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில் இரண்டு துணைத் திட்டங்கள் அடங்கும். அதில் ஒன்று, திருநங்கைகள் நலனுக்கான மறுவாழ்வுக்கான திட்டம். இரண்டாவது  யாசகம் எடுக்கும் செயலில் ஈடுபடும் நபர்களின் மறுவாழ்வுக்கான திட்டம். இந்த  திட்டமானது, மாற்றுத்திறனாளிகள் மற்றும் யாசகம் எடுக்கும் செயலில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கான நலன்சார்ந்த நடவடிக்கைகள் உட்பட பல  நடவடிக்கைகளை உள்ளடக்கியது.

மறுவாழ்வு, மருத்துவ வசதிகள், ஆலோசனைகள், கல்வி, திறன் மேம்பாடு, பொருளாதார இணைப்புகள் போன்றவற்றில் கவனம் செலுத்துகிறது.

இந்நிலையில், இத்திட்டம் தொடர்பாக  மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர்  வீரேந்திர குமார், மாநிலங்களைவையில் தெரிவித்ததாவது. “ 

குழந்தைகள் உட்பட யாசகம் எடுக்கும் செயலில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு மறுவாழ்வளிக்கும் ஸ்மைல்  துணைத் திட்டம், மதம், வரலாறு மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த 81  நகரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதுவரை 7,660 நபர்கள் கண்டறியப்பட்டு, அவர்களில் 352 குழந்தைகள் உட்பட 970 நபர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த 352 குழந்தைகளில், 169 குழந்தைகள் அவர்களின் பெற்றோர்களுடன் மீண்டும் சேர்க்கப்பட்டனர்; 79 குழந்தைகள் அங்கன்வாடிகளுக்கு அனுப்பப்பட்டனர்; 33 குழந்தைகள் நலக் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்; 71 குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். 

தமிழ்நாட்டில் திருநெல்வேலி, திண்டுக்கல்/பழனி, ஈரோடு, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், மதுரை ஆகிய நகரங்களும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரியும்  ஸ்மைல்  துணைத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

Continues below advertisement
Sponsored Links by Taboola