தற்போது இந்தியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் தான் நலம்பி ஸ்கின் நோய். இது என்ன புது வகையான நோய் என எல்லோரும் தற்போது ஆராயத் தொடங்கியுள்ளார்கள். இது ஒரு வகை ரத்தத்தை உறிஞ்சும் லம்பி ஸ்கின் வைரஸ் வகை நோய் என கண்டறியப்பட்டிருக்கிறது.
கோவிட் 19 தொற்றுகள், குரங்கு அம்மை, பன்றிக் காய்ச்சல், மலேரியா மற்றும் டெங்கு போன்ற பிற நோய்களுக்கு எதிராக நாடு தொடர்ந்து போராடி வருவதால், லம்பி ஸ்கின் நோய் தற்போது கவலைக்குரிய பிரச்சினையாக மாறியுள்ளது.
இந்த லம்பி ஸ்கின் நோயானது அதிகளவாக கால்நடைகளையே பாதிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஆகவே இந்த நோய் குறித்து மனிதர்கள் ஓரளவு நிம்மதி அடையலாம். இருந்தபோதிலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஆயிரக்கணக்கான கால்நடைகளுக்கு இந்த லம்பி ஸ்கின் நோய் பரவியிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
எட்டு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் 'லம்பி ஸ்கின் நோயால்' இதுவரை 7,300 க்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த தடுப்பூசி இயக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் ,குஜராத், ராஜஸ்தான், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் அதிகளவிலான மாடுகளுக்கு இந்த நோய் பரவியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதில்
குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மாடுகளிடையே லம்பி ஸ்கின் நோய் வேகமாக பரவி வருகிறது.
இந்த நோய் தாக்குதலால் மாட்டின் தோலில் கட்டிகள் உருவாகி மாடுகள் உயிரிழக்கும் நிலை ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நோய் மாடுகளின் உடம்பில் உள்ள ரத்தத்தை உறிஞ்சுவதால் அவை உயிரிழக்கும் நிலை ஏற்படுவதாகவே அறியப்படுகிறது. நோயைக் கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகள் தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறது. இந்த லம்பி ஸ்கின் நோய் கண்டறியப்பட்டுள்ள இந்தியாவின் எட்டு மாநிலங்களில் மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
லம்பி ஸ்கின் நோய்
கால்நடைகளை பாதிக்கும் ஒரு வைரஸ் நோயாகும். இது சில வகையான ஈக்கள் மற்றும் கொசுக்கள் அல்லது உண்ணி போன்ற இரத்தத்தை உண்ணும் பூச்சிகளால் பரவுகிறது. இது காய்ச்சலை ஏற்படுத்துகிறது, தோலில் முடிச்சுகள், கட்டிகள் போன்று தோன்றி இரத்தத்தை உறிஞ்சுவதால் கால்நடைகள் உயிரிழக்கின்றன.
இந்தியாவில் வேகமாக பரவி வரும் இந்த
LSD லம்பி ஸ்கின் தோல் நோய் மனிதர்களுக்கு பரவுமா எனக் கேட்டால்,
நோயால் கண்டறியப்பட்ட நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுடன் தொடர்பு கொண்டாலும், அது மனிதர்களுக்குப் பரவாது என்பதை அதிகாரிகளும் மருத்துவ நிபுணர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த
LSD லம்பி ஸ்கின் நோய் சமீபத்தில் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து ஆசியாவில் பரவியது. அதன் பின்னர் இந்த நோய் 2019 ஜூலை இல் பங்களாதேஷில் கால்நடைகளிடையே பரவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து படிப்படியாக அதே ஆண்டு, 2019 இல், இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் குறிப்பாக மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவில் லம்பி ஸ்கின் நோய் பரவத் தொடங்கியுள்ளது.
அதன்பின்னர்
இந்த ஆண்டு இந்தியாவின் மேற்கு மற்றும் வட மாநிலங்களிலும் அந்தமான் நிக்கோபாரிலும் இந்நோய் பதிவாகியுள்ளது. முதலில், லம்பி ஸ்கின் நோய் குஜராத்தில் தொடங்கி, தற்போது எட்டு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு பரவியுள்ளது. இதுவரை 1.85 லட்சத்துக்கும் அதிகமான கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஜூலையில் நோய் பரவியதில் இருந்து இதுவரை 7,300க்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்துள்ளன. மற்றும் கொசுக்கள் மூலம் இந்த நோய் வைரஸ் பரவுவதால், நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் முறையான சுகாதாரத்தை உறுதி செய்ய ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் கால்நடை பராமரிப்பு துறைகள் இணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லம்பி ஸ்கின் தோல் நோய் பாதிக்கப்பட்ட கால்நடைகள் இறந்தால், மருத்துவ நெறிமுறைகளின்படி அவற்றை தகனம் செய்ய வேண்டும்.
லம்பி ஸ்கின் நோயின் அறிகுறிகளாக,
காய்ச்சல், கண்கள் மற்றும் மூக்கில் இருந்து வெளியேறுதல், அதிக உமிழ்நீர் வடிதல், கால்நடைகளின் உடலில் கொப்புளங்கள் மற்றும் பால் உற்பத்தி குறைதல் ஆகியவை இதன் இன் அறிகுறிகளாகும்.
சில சந்தர்ப்பங்களில், கால்நடைகள் சாப்பிடுவதில் சிரமம் ஏற்படுத்தும்.
இந்த லம்பி ஸ்கின் நோயால்
மாட்டின் தோல் பகுதியில் 5 செ.மீ விட்டம் கொண்ட கட்டிபோன்ற அமைப்பு உருவாகும்
மாடுகளின் மீது
இந்த நோய் தாக்கம் சுமார் 4 முதல் 14 நாட்கள் வரை பாதிப்பு இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குஜராத், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாடுகள் அத்துடன் தடுப்பு நடவடிக்கையாக ஏனைய கால்நடைகளுக்கு செலுத்த 17.92 தடுப்பூசிகள் தயார் நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவை தற்போது இந்தியாவில் லட்சக்கணக்கான மாடுகளிடையே பரவி இருப்பதால் மாட்டுப் பண்ணை வைத்து நடத்தும் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்து இருக்கிறார்கள்.
தற்போது பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு இலவச தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை விவசாயிகள் மற்றும் கால்நடை உரிமையாளர்கள் தொடர்பு கொண்டு அறிவித்தால் உடனடியாக மருத்துவ குழுவினர் நேரில் சென்று தடுப்பூசிகளை வழங்குவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த லம்பி ஸ்கின் நோயால்
குஜராத் மாநிலத்தில் மட்டும் நாளொன்றுக்கு 50 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருந்த போதும் இந்த வகை நோயால் மனிதர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்