ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கான ஆதார் அட்டையே புளூ ஆதார்(Blue Aadhaar) அல்லது பால் ஆதார் அட்டை(Baal Aadhaar card) என அழைக்கப்படுகிறது.
UIDAI எனப்படும் Unique Identification Authority of India வழங்கும் இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்குமான அத்தியாவசிய தனி நபர் அடையாள அட்டையே ஆதார். அரசின் நலத்திட்டங்களைப் பெற ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இச்சூழலில், தற்போது ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கான அடையாள அட்டையாக புளூ அல்லது பால் ஆதார் அட்டையை UIDAI அறிமுகப்படுத்தியுள்ளது. குழந்தைகள் ஐந்து வயதைக் கடந்ததும் இந்த புளூ அடையாள அட்டைகள் செல்லுபடி ஆகாதவை ஆகிவிடும்.
தங்கள் குழந்தைகளுக்கான இந்த தனி நபர் அடையாள அட்டையைப் பெற இந்தியப் பெற்றோர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன எனப் பார்ப்போம்:
- புளூ ஆதார்(Blue Aadhaar) அட்டையைப் பெற முதலில் அதிகாரப் பூர்வ தளமான uidai.gov.in க்கு செல்ல வேண்டும்.
- அதில் ஆதார் அட்டை பதிவு செய்வதற்கான விருப்பத்தைத் தேர்வு செய்யுங்கள்.
- குழந்தைகளின் பெயர், பெற்றோர்/ பாதுகாவலரின் கைப்பேசி எண், அவர்களது பிற பயோமெட்ரிக் தகவல்களை பதிவு செய்க.
- மக்கள் தொகை விவரங்களான முகவரி, ஊர், மாநிலம் உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்க.
- பதிவிட்ட தகவல்களை Submit செய்க.
- தொடர்ந்து Appointment எனும் விருப்பத்தை தேர்வு செய்து, உங்களுக்கு அருகிலுள்ள தகவல் பதிவு செய்யும் மையத்தைத் தெரிவு செய்து, நேரில் செல்லும் நேரத்தையும் உறுதி செய்து கொள்ளுங்கள். முகவரி சான்று, ஐடி சான்று உள்ளிட்ட தேவையான அனைத்து சான்றிதழ்களையும் உடன் எடுத்துச் செல்வதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பயோமெட்ரிக்ஸ் எதுவும் எடுக்கப்படாது என்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். குழந்தைகளின் UIDஆனது மக்கள்தொகை தரவு, பெற்றோரின் UID உடன் இணைக்கப்பட்ட புகைப்படம் ஆகியவற்றைப் பயன்படுத்தியே செயலாக்கப்படும்.
இக்குழந்தைகள் 15 வயதை அடையும் போது, அவர்களது விரல்கள், கருவிழி, புகைப்படம் ஆகியவற்றை உள்ளடக்கிய பயோமெட்ரிக் தகவல்களை புதுப்பிக்கப்பட வேண்டும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்