ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பள்ளி மாணவியை சிறுவன் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.


அந்தப் பெண் பக்கூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் பழங்குடியின மாணவி என்று கூறப்படுகிறது. வீடியோவில், சிறுவன் சிறுமியை மீண்டும் மீண்டும் உதைப்பதைக் காணலாம். சிறுமி சீருடை அணிந்து பள்ளிப் பையை ஏந்தியவாறு காணப்படுகிறார்.


சிறுமி மற்றும் குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் பற்றிய வீடியோ மற்றும் விவரங்களை வெளியிட்ட ட்வீட்டிற்கு முதலமைச்சர் சோரன் பதிலளித்துள்ளார் அதில், “குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.






"இந்த விஷயத்தை விசாரித்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்த பிறகு தெரிவிக்கவும்" என்று ஹேமந்த் சோரன் ட்வீட் செய்துள்ளார்.


இது குறித்து உடனடியாக போலீசார் நடத்திய விசாரணையில், 9ம் வகுப்பு படிக்கும் சிறுவன் தும்கா மாவட்டத்தில் வசிப்பவர் என்பது தெரியவந்துள்ளது.


இந்த வழக்கில் தும்கா காவல்துறை தற்போது மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகிறது என்று பாகூர் காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) ஹ்ருதீப் பி ஜனார்த்தனன் பிடிஐயிடம் தெரிவித்துள்ளார்.


முதல்கட்ட விசாரணையில், இது ஒரு காதல் விவகாரம் போல் தெரியவந்துள்ளதாக தும்கா துணைப் பிரிவு போலீஸ் அதிகாரி (SDPO) நூர் முஸ்தபா அன்சாரி கூறியுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண