சமீப காலமாக மனித குலத்தை அச்சுறுத்தும் நோய்களின் பட்டியலில் இருப்பது புற்றுநோய் தான். புற்றுநோயில் பல வகைகள் இருக்கின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.


குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படுவது என்ன?


பெரியவர்களுக்கு வருவதற்கு வாழ்வியல் மாற்றங்கள், உடல் எடை, மது, புகைபழக்கம் போன்ற காணரங்களாக இருக்கின்றன. ஆனால், குழந்தைகளுக்குப் புற்றுநோய் வருவதற்கு காரணமென்பது புரியாத புதிராக இருக்கிறது.  இந்த நிலையில், குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய்க்கான அறிகுறிகள், காரணம் உள்ளிட்டவற்றை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டிருக்கிறது. 


அதன்படி, ஒவ்வொரு ஆண்டுக்கும் 18 வயதுக்குள் இருக்கும் நான்கு லட்சம் சிறார்களுக்கு புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.  குறிப்பாக, லுகேமியா (எலும்புப மற்றும் ரத்தத்தில் வரும் புற்றுநோய்), மூளைக்கட்டிகள் (brain cancers), நியூரோப்ளாஸ்டோமா (neuroblastoma), லிம்போமா ( lymphomas) தசை மற்றும் வயிற்றுப் பகுதியில் வரும் புற்றுநோய்களால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். 


குழந்தைகளுக்கு மரபணு வழியாக புற்றுநோய் பாதிக்கப்படுகின்றன.  தற்போதைய தரவுகள்படி, மரபணு வழியாக 10 சதவீத குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  எச்.ஐ.வி, மலேரியா போன்ற சில நாள்பட்ட நோய்த்தொற்றுகள் குழந்தை பருவ புற்றுநோய்க்கான ஆபத்து காரணிகளாகும்.  பிற நோய்தொற்றுகளும் புற்றுநோய்யை பாதிப்பை ஏற்படுத்தலாம். மேலும், மலேரியா, டைபாய்டு போன்ற தொற்றுகளால் குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படலாம் என்று உலக சுகாதார அமைப்பு கூறியிருக்கிறது. 


அறிகுறிகள் என்ன?


அதீத காய்ச்சல், உடல் எடை குறைவது/அதிகரிப்பது, திடீரென உடலில் ஏற்படும் சில மாற்றங்கள், எலும்பு, மூட்டு வலி, நரம்பு தொடர்பான பிரச்னைகள், தொடர் வாந்தி, தலைவலி, நடப்பதில் சிரமம், வயிறு, இடுப்பு பகுதி, உள்ளூறுப்புகளில் கட்டிகள் வருவது, பார்வை குறைபாடு, இமை வீக்கம் போன்றவை குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோயின் அறிகுறிகளாகும். 


சிகிச்சைகள்:


குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய்களை குணப்படுத்த முடியும். ஆரம்ப நிலையிலேயே இதை கண்டறிந்தால் வெகு விரைவாக குணப்படுத்த வாய்ப்புகள் அதிகம் உள்ளன. தீவிரம் அடைந்து கீமோதெரபி சிகிச்சை செய்யும் அளவுக்குப் போய்விட்டால், குழந்தைகள் மிகவும் சிரமப்படுவார்கள்.


அதனால் எவ்வளவு சீக்கிரம் கண்டறிகிறோமா,  அவ்வளவு எளிதாக குணப்படுத்த முடியும். இதற்கு, கீமோதெரபி, அறுவை சிகிச்சை, ரேடியோதெரபி மூலம் புற்றுநோய்களை குணப்படுத்த முடியும்.   மேலும், குழந்தைகளுக்கு ஏற்படும் கர்பப்பை வாய் புற்றுநோயை தடுப்பூசி மூலம் குணப்படுத்தமுடியும்.


9 முதல் 26 வயதுடையவர்கள் செர்வாவாக்  தடுப்பூசியை பயன்படுத்தலாம்.  செர்வாவாக் (Cervavac)  என்பது இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் மூலம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் HPV தடுப்பூசி ஆகும். இதில், வருத்தப்பட வேண்டிய உண்மை என்னவென்றால் வறுமை, சமூதாய ஏற்றத்தாழ்வுகள், போதிய சிகிச்சையின்மை போன்ற காரணங்களால் இதில் இருந்து மீளவதில்லை என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. 


குறைந்த பொருளாதாரத்தை கொண்ட நாடுகளில் 29 சதவீத குழந்தைகள் மட்டுமே புற்றுநோயில் இருந்து மீள்கின்றனர். போதுமான மருந்துகள், முறையான சிகிச்சைகள் உள்ளிட்டவற்றை இல்லாததே இதற்கு காரணம் என்று தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க


Cancer Vaccine: அறிவியலின் அடுத்த உச்சம்! விரைவில் புற்றுநோய்க்கான தடுப்பூசி - மாஸ் காட்டும் ரஷியா!