Alipur Fire Accident: டெல்லி அலிபூர் சந்தை பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனியாருக்கு சொந்தமான பெயிண்ட் தொழிற்சாலையில் நேற்று மாலை சுமார் 05.30 மணியளவில் எதிர்பாராத விதமாக தீப்பற்றியுள்ளது. அங்கே ரசாயனங்கள் அதிகளவில் இருந்ததால், அடுத்த சில நிமிடங்களிலேயே தீ வேகமாக பரவி ஆலையின் பெரும்பாலான பகுதி கொழுந்து விட்டு எரிந்துள்ளது. இதனால் பல அடி உயரத்திற்கு கரும்புகை சூழ்ந்துள்ளது. தகவலறிந்து 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. 4 மணி நேர கடும் முயற்சிக்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனிடயே, இந்த விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலையில் இருந்த ரசாயனங்களால் ஏற்பட்ட வெடி விபத்தால், தீப்பற்றி இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. உரிய காரணம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை நடத்தி வருகின்றனர். அதோடு, விபத்தில் சிக்கி மேலும் சிலர் காணவில்லை என்பதால், அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


 










பலி எண்ணிக்கை அதிகரிப்பு:


இதனிடையே தியணைப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லியில் இரண்டு பெயின்ட் மற்றும் ரசாயன குடோன்களில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர், 4 பேர் காயமடைந்தனர். இறந்தவர்கள் பாபு ஜக்ஜீவன் ராம் மருத்துவமனைக்கும், காயமடைந்த நான்கு பேர் ராஜா ஹரிஷ் சந்திரா மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இறந்தவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.