மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 


மேற்கு  வங்கத்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், மம்தா பானர்ஜியின் தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது. ஆனால், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார். பாஜகவின் சுவந்து அதிகாரியிடம் அவர் தோல்வி அடைந்தது அக்கட்சியினரிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. 


MS Dhoni Birthday: என்றும் தமிழ்நாட்டின் ‛தல’ மகன் தோனியின் ‛டாப் 7’ பெஸ்ட் இன்னிங்ஸ்!


இந்த நிலையில், நந்திகிராமில் பாஜக வெற்றி பெற்றதை எதிர்த்து கொல்கத்தா நீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி வழக்கு தொடர்ந்தார். அத்துடன் இந்த வழக்கை, நீதிபதி கெளஷிக் சந்தா விசாரிக்க மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். நீதிபதி பாஜக தலைவர்களுடன் தொடர்பு என மம்தா பானர்ஜி தரப்பு வழக்கறிஞர் குற்றம்சாட்டியிருந்தார். 


 






இந்த நிலையில், நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சித்ததாக  கூறி மம்தாவுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மம்தா பானர்ஜியின் இந்த செயல் திட்டமிட்ட நடவடிக்கை என்று கூறிய நீதிபதி கெளஷிக் சந்தா, அபராதத் தொகை மேற்கு வங்கத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் என்றும் கூறினார். அத்துடன், இந்த வழக்கில் இருந்து தானாக விலகிக்கொள்வதாகவும் நீதிபதி கெளஷிக் சந்தா அறிவித்தார். மாநில முதலமைச்சருக்கு நீதிமன்றம் அபாரதம் விதிக்கப்பட்டிருப்பது மேற்கு வங்கத்தில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.






 


கடந்த ஏப்ரல் மாதம் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக கெளஷிக் சந்தா நியமிக்கப்பட்டார். இதற்கு, அம்மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.முன்னதாக, நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய மம்தா பானர்ஜி, தான் ராஜ்நாத் சிங் முதல் சுஷ்மா சுவராஜ் வரை எத்தனையோ பாஜக தலைவர்களை பார்த்து இருப்பதாகவும், ஆனால், தற்போதுள்ள பாஜக மாறுப்பட்டது எனவும் கூறினார்.


Dilip Kumar Passes Away: பிரபல பாலிவுட் நடிகர் திலீப்குமார் காலமானார்!