பாலிவுட் உலகில் சிறந்த நடிகராக விளங்கிய திலீப் குமார் சற்று முன் காலமானார். 98 வயதான அவர் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த அவர், சற்று முன் இயற்கை எய்தினார். 1944ல் ஜ்வார் பாட்டா படத்தில் அறிமுகமான அவர், நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பு பணியிலும் ஈடுபட்டார். 1994ல் தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்பட்டது. 1998 ல் பாகிஸ்தானின் சிவிலியன் விருதான நிஷான்-ஏ-பாகிஸ்தான் விருது பெற்ற இரண்டு இந்தியர்களின் திலீப்குமாரும் ஒருவர். இந்தியா-பாகிஸ்தான் மக்களை நெருக்கமாக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டவர். 2000 ம் ஆண்டு மேல்சபை நாடாளுமன்ற உறுப்பினராகவும்  பணியாற்றியுள்ளார் திலீப்குமார். அவரின் மறைவுக்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


 






பாலிவுட் லெஜெண்ட் என அழைக்கப்படும் திலீப் குமார் நடிகர் மற்றும் படத்தாயாரிப்பாளர் மட்டுமின்றி அரசியல் வாழ்க்கையிலும் களம் கண்டுள்ளார். இவர் கடந்த 2000 முதல் 2006 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்திருந்தார். நடிகர், படத்தயாரிப்பாளர், அரசியல் பிரவேசம் என அனைத்திலும் தன்னுடைய திறமையினை மிகச்சிறப்பாக மேற்கொண்ட இவர் தற்போதுள்ள பாலிவுட் நடிகர்களுக்கு பிதாமகனாகவும் விளங்கி வருகிறார். பல்வேறு திறமைகளை தன்னிடம் கொண்டிருந்த இவர் முதுமையின் காரணமாக தன்னுடைய 98 வயதில் உயிரிழந்தது ரசிகர்கள் மற்றும் திரையுலகினருக்கிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.


உலகில் காதல் என்ற ஒன்று இருக்கும் வரை தேவதாஸினை யாரும் மறக்க மாட்டோம், அதேப்போன்று மன்னர்களின் வரலாறுகளை நினைவுக்கூரும் பொழுது எல்லாம் ரசிகர்களின் மனதிற்கு நிச்சயம் நடிகர் திலீப் குமார் வந்து செல்வார்.


திலிப் குமாரின் திரைப்பயணத்தில் அவரது பாடல்கள் முக்கியமானவை. அவற்றை பார்க்கலாம்:



 


 



மறைந்த திலீப்குமாருக்கு தலைவர்கள் முக்கிய பிரபலங்கள் பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக பல்வேறு தரப்பிலிருந்தும் இரங்கல் தெரிவிக்கப்பட்டு, டுவிட்டர் முழுவதும் திலீம் குமார் இரங்கல் நிரம்பி வழிகிறது. பாலிவுட்டின் பிதாமகன் திலீப்குமார்.