மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கல்கத்தாவின் முக்கிய கொண்டாட்டம் துர்கா பூஜை. கடந்தாண்டு இவ்விழாவை கலாச்சார பாரம்பரிய நிகழ்வுகள் பட்டியலில் இணைத்தது யுனெஸ்கோ. இந்தாண்டு துர்கா பூஜையை முன்னிட்டு அம்மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு 11 நாட்கள் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
துர்கா பூஜை அரசு விடுமுறை நாட்கள்:
அரசு ஊழியர்களுக்கு வரும் செப்டம்பர் 30 -ஆம் தேதி முதல் அக்டோபர் 10- ஆம் தேதி வரை 11 நாட்கள் சரவஸ்வதி பூஜை, துர்கா பூஜை உள்ளிட்ட விழாக்களுக்காக அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு அரங்கில் துர்கா பூஜை விழா ஏற்பாடு அமைப்பாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் துர்கா பூஜைக்கான அரசு விடுமுறை குறித்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்தார்.
கடந்த ஆண்டு, துர்கா பூஜை விழாவுக்கா16 நாட்கள் அரசு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வார இறுதி நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையுடன் காளிபூஜை, தீபாவளி, Bhaifota விழா மற்றும் சத் பூஜை (Chhatpuja) உள்ளிட்டவைகளுடன் துர்கா பூஜை விடுமுறையையும் சேர்த்து 22 நாட்கள் என விடுமுறை எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
கடந்த ஆண்டிலிருந்து, துர்கா பூஜை விழாவை பிரம்மாண்டமாக கொண்டாடும் நோக்கில் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு துர்கா பூஜை நடத்தும் குழுவிற்கும் ரூ.50,000 ரூபாய் மானியமாக மாநில அரசு அறிவித்தது. போலவே, இந்தாண்டும் துர்கா பூஜையை சிறப்பாக நடத்துவதற்காக ஒவ்வொரு அமைப்புக்கும் ரூ.60,000 தொகையை மம்தா வழங்கினார்.
இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறுகையில், கடந்தாண்டைவிட, இம்முறை துர்கா பூஜைக்கு வழங்கப்படும் மானியத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் மாநில மின்சார விநியோக காப்ரேசனிடம் மின் பயன்பாட்டுக்கு 60 சதவீத தள்ளுபடி வழங்குமாறு கோரிக்கை வைக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், துர்கா பூஜைக்காக அமைப்பாளர்கள் யாரும் தீயணைப்பு படைக்கு பணம் செலுத்த வேண்டியதில்லை. பூஜைக்கு வரி செலுத்த வேண்டாம். பூஜை குறித்த விளம்பரத்திற்கும் வரி இல்லை. இந்தாண்டு பூஜைக்கான ஏற்பாடுகள் சிறப்பாக இருக்க வேண்டும் அதற்காக தேவையான ஆதரவினை மாநில முழுமையாக வழங்கும் என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மதியம் 2 மணிக்கு ஜோராசங்கோ தாகுர்பாரியில் இருந்து பேரணி தொடங்கும். பூஜை அமைப்பாளர்கள் பேரணியில் கலந்து கொண்டு மாபெரும் வெற்றியடையச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு மஹாலயா செப்டம்பர் 25 அன்று திட்டமிடப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் அக்டோபர் 8 ஆம் தேதியும், மற்ற மாநிலங்களில் அக்டோபர் 7 ஆம் தேதியும் பூஜை திருவிழாவிற்கான தேதி திட்டமிடப்பட்டது. "கொல்கத்தா திருவிழாவில் பங்கேற்காதவர்கள் அக்டோபர் 7 ஆம் தேதிக்குள் தெய்வங்களை மூழ்கடிக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.
துர்கா பூஜை விழா தொடக்கமாக, மஹாலயா (Mahalaya) விழா செப்டம்பர் 25 ஆம் தேதி நடைபெற உள்ளது. பூஜை விழா அக்டோபர் 8 ஆம் தேதி கல்கத்தாவிலும், மாநிலத்தின் மற்ற பகுதிகளில் அக்டோபர் 7 ஆம் தேதியும் நடைபெற உள்ளது.