பீகாரில் எதிர்கட்சிகள் நடத்திய பொதுக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை  சந்தித்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ,அமலாக்கத்துறை ,சிபிஐ முகமைகளை பாஜக தவறாக பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார். 


வருகிற 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஒரே அணியாக இணைந்து எதிர் கொள்ள, எதிர்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. இதற்கான ஆலோசனை கூட்டம் பீகார் தலைநகர் பட்னாவில் இன்று நடைபெறுகிறது. அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், ஹேமந்த் சோரன், உத்தவ் தாக்கரே, சரத்பவார், உமர் அப்துல்லா மற்றும் டி.ராஜா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.


கூட்டத்திற்கு பின்னர் எதிர்கட்சி தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தினர். அப்போது மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசியதாவது: “அமலாக்கத்துறை, சிபிஐ முகமைகளை பாஜக தவறாக பயன்படுத்துகிறது. சிம்லாவில் நடக்கும் இரண்டாவது கூட்டத்தில் பாஜகவை வீழ்த்துவது குறித்து விரிவாக விவாதிப்போம். பாஜகவை வீழ்த்த ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்பதே கூட்டத்தின் நோக்கம்”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


இதற்கிடையே பேசிய பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், 2024 தேர்தலில் ஒன்றாக போட்டியிட முடிவு செய்துள்ளோம். இது ஒரு நேர்மறையான சந்திப்பாகும். அடுத்த கூட்டம் சிம்லாவில் நடைபெற உள்ளது என தெரிவித்தார்.


முன்னதாக இந்த பொதுக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்ததாவது: “இந்தியாவில் சிந்தாந்த அடிப்படையில் யுத்தம் துவங்கியுள்ளது. ஒருபுறம் காங்கிரஸ் கட்சி இந்திய ஒற்றுமையை வலியுறுத்தும் சித்தாந்தம் .மற்றொருபுறம் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் -இன் பிரிவினை சித்தாந்தம். பாஜக வெறுப்பு, வன்முறையை பரப்பி நாட்டை பிளவுபடுத்தி வருகிறது. காங்கிரஸ் அன்பு மற்றும் ஒற்றுமையை வலியுறுத்துவதுடன் அதன்படி செயல்பட்டு வருகிறோம். தற்போது நடைபெற்று வரும் எதிர்கட்சிகளின் இந்த கூட்டம் பாஜகவை வீழ்த்துவதற்கானது. தெலங்கானா , மத்திய பிரதேசம் , ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நாங்கள் வெற்றி பெறுவோம். பாஜகவை இனி எங்குமே பார்க்க முடியாது. காங்கிரஸ் ஏழைகளுடன் இருக்கிறது அதனால் வெற்றி பெறுவோம். ஆனால் பாஜகவோ பணம் படைத்த சிலருடன் உள்ளது.” இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.


மேலும் படிக்க 


2024 தேர்தலை ஒன்றாக எதிர்கொள்ள முடிவு..சிம்லாவில் அடுத்த கூட்டம்...எதிர்க்கட்சி தலைவர்கள் அறிவிப்பு..


Crime: பட்டப்பகல்.. நட்ட நடு வீதி.. ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட முன்னாள் மாணவர்கள் - நடந்தது எப்படி?