மேற்கு வங்கத்தில் அலிபுர்துவார் மாவட்டத்தில் நடைபெறும் பழங்குடியினர் திருமண நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பழங்குடியினருடன் இணைந்து நடனம் ஆடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பழங்குடி மக்களோடு நெருக்கமாக பழகும் வழக்கம் கொண்டவர். மேற்கு வங்கத்தில் பழங்குடி மக்கள் அதிகம் வாழும் மாவட்டங்களான மேற்கு மிட்னாபூர், ஜார்கம், புருலியா, பங்குரா ஆகியவற்றிற்கு உட்பட்ட 40 சட்டமன்றத் தொகுதிகளில் 29 தொகுதிகளை மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கடந்த ஆண்டு தேர்தலில் கைப்பற்றியது. இதே பகுதியில் 6 நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கும் நிலையில், அவற்றுள் ஐந்தைக் கைப்பற்றியிருப்பதால், இப்பகுதியில் பாஜக படிப்படியாக நுழைந்து வருகிறது. 


கடந்த ஆண்டு, சர்வதேச பழங்குடியினர் தினத்தைக் கொண்டாடும் விதமாக, பழங்குடி மக்கள் அதிகம் வாழும் ஜங்கள்மகால் பகுதிக்குச் சென்ற மம்தா பானர்ஜி, மத்திய அரசு பழங்குடி மக்களின் நிலங்களை பழங்குடி அல்லாதோருக்குக் கைம்மாற்றுவதைத் தடுக்க சட்டம் இயற்றப்பட வேண்டும் எனப் பேசினார். கடந்த 2018ஆம் ஆண்டு, பழங்குடியினரின் சொத்துகள் மீது தனது அரசு கை வைக்காது எனவும் மம்தா பானர்ஜி சூளுரைத்திருந்தார். 







இந்நிலையில் சமீபத்தில் நடந்த பழங்குடி நிகழ்ச்சியில் பேசிய மம்தா பானர்ஜி, `பழங்குடியினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். நம் மாநிலத்தின் பழங்குடி சமூகங்களின் முன்னேற்றத்திற்காக அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். ஜார்காம் பகுதியில் உள்ள பழங்குடியினரில் சுமார் 95 சதவிகிதம் பேர் மாநில அரசுத் திட்டங்களால் நன்மை பெற்றுள்ளனர். பழங்குடியினரின் நலனுக்காக தனித்துறை உருவாக்கியுள்ளதோடு, அவர்களின் நிலவுரிமையையும் காப்பாற்றி வருகிறோம். மேற்கு வங்கத்தில் பழங்குடியினரின் நிலத்தை அபகரிக்க முடியாது.. இதே சட்டத்தை மத்திய அரசு நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும்’ எனக் கூறியுள்ளார். 


மேலும், பழங்குடியினரின் சந்தாலி எழுத்து வடிவத்தில் எழுதப்படும் ஒல் சிக்கி மொழியை மேற்கு வங்க அரசு அங்கீகரித்துள்ளதாகவும் முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண