தமிழ்நாடு:
- பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு வரும் ஜூன் 28ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.
- பொறியியல் மாணவர் சேர்க்கைகான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரும் 20ஆம் தேதி முதல் தொடக்கம்.
- தமிழ்நாட்டில் கந்துவட்டி தொடர்பான புகார்களை தாமதமின்றி விசாரிக்க ஆப்ரேஷன் கந்துவட்டி என்ற புதிய திட்டத்தை டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
- நடிகை நயன் தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோரின் திருமணம் இன்று மகாபலிபுரத்தில் நடைபெறுகிறது.
- தமிழ்நாட்டில் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
- சென்னை விமான நிலையத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் கண்டுபிடிப்பு.
இந்தியா:
- டெல்லி,மும்பை, குஜராத் மாநிலங்களில் பாதுகாப்பு பணிகள் தீவிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது.
- நாடு முழுவதும் நெல் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
- 14 வகையான பயிர்களுக்கான கொள்முதல் விலையை அதிகரிக்க மத்திய அரசு திட்டம்.
- குஜராத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் 4 மணி நேர போராட்டத்திற்கு பின்பு உயிருடன் மீட்பு.
- மும்பையில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 16 பேர் காயம் அடைந்துள்ளனர்.
- முகக்கவம் அணியாவிட்டால் விமானத்தில் பயணிக்க முடியாது என்று விமான போக்குவரத்து துறை அறிவிப்பு
உலகம்:
- மெக்சிகோவில் நடைபெற்ற துப்பாக்கிச் சுட்டில் 5 மாணவ-மாணவிகள் உயிரிழப்பு.
- பாகிஸ்தானில் ஏற்பட்ட வேன் விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
- மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவிற்கு போதை பொருள் எடுத்துச் செல்லும் சுரங்க பாதை கண்டுபிடிப்பு.
- ஈரானில் ரயில் பேட்டிகள் தடம்புரண்டு 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
விளையாட்டு:
- இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனையும் கேப்டனுமான மித்தாலி ராஜ் தன்னுடைய ஓய்வை அறிவித்தார்.
- இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி இன்று டெல்லியில் தொடங்குகிறது.
- காயம் காரணமாக கே.எல்.ராகுல் விலகிய நிலையில் ரிஷப் பண்ட் இந்திய அணியின் கேப்டனாக நியமனம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்