பெங்காலி, ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை ’பங்ளா’ என மாற்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 மொழிகளில் பெயர் மாற்றம்
இதுகுறித்து முன்னதாக முன்னதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் மக்களவைக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ”நாடு முழுவதும் உள்ள நகரங்களின் பெயர்களை மாற்றுவதற்காக கடந்த ஐந்து ஆண்டுகளில் பெறப்பட்ட கோரிக்கைகளுக்கு ’தடையில்லா சான்றிதழ் (NOC)’ வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் , “பெங்காலி, ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் மாநிலத்தின் பெயரை “பங்ளா” என்று மாற்றுவதற்கான முன்மொழிவு மேற்கு வங்க அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் (ஏஐடிசி) எம்பி சைதா அகமது, நாடு முழுவதும் உள்ள நகரங்களின் பெயர்களை மாற்றுவதற்கு உள்துறை அமைச்சகம் பெற்ற பரிந்துரைகளின் விவரம், எண்ணிக்கை குறித்தும், அதற்கான வழிகாட்டுதல்களை அரசாங்கம் மறுசீரமைத்துள்ளதா என்றும் கேள்வி எழுப்பினார்.
இதுவரை பெயர் மாற்றம் செய்யப்பட்ட நகரங்கள்
மேலும் பாரம்பரிய இடங்களின் பெயர்களை மாற்றுவதற்கான வழிகாட்டுதல்களை அரசு மறுசீரமைத்துள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து அத்தகைய வழிகாட்டுதல்கள் எதுவுமில்லை என பதிலளித்த நித்யானந்த் ராய், 2017 ஆம் ஆண்டில், ஆந்திரப் பிரதேச நகரமான ’ராஜமுந்திரி’ நகரின் பெயர் ’ராஜமஹேந்திரவரம்’ என மாற்றப்பட்டது.
2018ஆம் ஆண்டில் ஜார்கண்ட் நகரமான ’நகர் உன்டாரி’ பெயர் ’ஸ்ரீ பன்ஷிதர் நகர்’ எனவும், அதே ஆண்டில் உத்தரப் பிரதேச நகரமான ‘அலகாபாத்’ பெயர் ‘பிரயாக்ராஜ்’ எனவும் மாற்றப்பட்டது.
2021 ஆம் ஆண்டில், மத்தியப் பிரதேச நகரத்தின் ’ஹோஷங்காபாத் நகர்’ பெயர் 'நர்மதாபுரம்’ என்றும், 2022 இல், பஞ்சாப் நகரத்தின் ’ஸ்ரீ ஹர்கோபிந்த்பூர்’ பெயர் ’ஸ்ரீ ஹர்கோபிந்த்பூர் சாஹிப்’ எனவும் மாற்றப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் இவை தவிர, மத்தியப் பிரதேசத்தின்’நஸ்ருல்லாகஞ்ச் நகர்’ என்ற பெயரை ’பேருண்டா’ என்று மாற்றுவதற்கான முன்மொழிவு இந்த ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி அம்மாநில அரசிடமிருந்து உள்துறை அமைச்சகத்தில் பெறப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்