சமூக வலைதளங்களில் எப்போதும் ஒரு சில தகவல்கள் மிகவும் வேகமாக வைரலாவது வழக்கம். அதிலும் குறிப்பாக போலி செய்திகள் உண்மையான செய்திகளைவிட மிகவும் வேகமாக பரவி விடும். அந்தவகையில் தற்போது வீட்டிற்கு ஒரு மதுபான பைப் லைன் அமைக்கும் திட்டம் உள்ளதாக ஒரு போலி செய்து வேகமாக பரவி வந்துள்ளது.
பரவிய போலி செய்தி என்ன?
இந்நிலையில் இந்தப் போலி செய்தி தொடர்பாக பிஐபி ஒரு உண்மை தன்மையை வெளியிட்டுள்ளது. அதன்படி இணையத்தில் மதுபான பைப் லைன் இணைப்பு தருவதற்காக விண்ணப்பம் வரவேற்கபடுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் தினமும் மது அருந்துபவர்களுக்கு 11 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் மது வீட்டிற்கு பைப் லைனில் வரும் என்று கூறப்பட்டிருந்தது. அத்துடன் இந்த விண்ணப்பம் போடப்பட்ட ஒரு மாதத்திற்கு பின்பு வீட்டிற்கு பைப் லைன் உடன் ஒரு மீட்டர் வரும். அதில் நீங்கள் பயன்படுத்திய அளவிற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக இந்தியில் ஒரு போலி செய்தி பரவி வந்துள்ளது. இந்தச் செய்தி போலியானது என்று பதிவிட்டு பிஐபி ட்விட்டர் கணக்கு ஒரு பதிவை செய்துள்ளது. அந்தப் பதிவில், “உங்களுடைய நம்பிக்கை ரொம்ப அதிகமாக்காதீர்கள்” எனப் பதிவிட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்