கர்நாடக சட்டசபை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் தென்னாப்பிரிக்காவில் பயன்படுத்தப்பட்டதா? என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.


கர்நாடக தேர்தல்


224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ஆம் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு தேர்தல் நடந்து முடிந்தது. இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றுள்ளது.


கர்நாடகாவில் சட்டசபை தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் ஆணையம் சுமார் ரூ.440 கோடியை செலவு செய்திருப்பது தெரியவந்துள்ளது. ஒரு தொகுதிக்கு மட்டும் ரூ.1.96 கோடி பணத்தை தேர்தல் ஆணையம் செலவு செய்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்காக ரூ.394 கோடி செலவு செய்யப்பட்டிருந்தது.


மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள்:


இந்நிலையில், காங்கிரஸ் எம்பியும் கர்நாடக பொதுச் செயலாளருமான, ரந்தீப் சிங் சுர்ஜேவாலா தேர்தல் ஆணையத்தற்கு கடிதம் ஒன்று எழுதி இருந்தார். அதில் தென்னாப்பிரிக்காவில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கர்நாடக தேர்தலில் பயன்படுத்தப்பட்டது என்றும், அதுவும் மறுமதிப்பீடு மற்றும் மறு சரிபார்ப்பு செயல்முறையை மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார். 


தென்னாப்பிரிக்கா அல்லது உலகில் மற்ற எந்த நாட்டிலும் பயன்படுத்தப்பட்ட வாக்கு எந்திரங்களை கர்நாடகா தேர்தலில் பயன்படுத்தவில்லை என்றும்,  தென்னாப்ரிக்கா தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதில்லை என்பதை தென்னாப்பிரிக்காவின் தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மூலம் எளிதாக தெரிந்துகொள்ள முடியும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.  


தற்போது கர்நாடகாவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட அனைத்து வாக்குப்பதிவு எந்திரகளும் புதிய வாக்குப்பதிவு எந்திரங்கள். இந்த உண்மை காங்கிரஸ் கட்சிக்கு நன்றாகவேத் தெரியும்" என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஒரு தேசிய அரசியல் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி.யின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டிய கடமை உள்ளது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.


மேலும் படிக்க MI vs GT IPL 2023: முதல் அணியாக ப்ளே ஆப் செல்லுமா குஜராத்..! பழிவாங்குமா மும்பை...! ஐ.பி.எல். வரலாறு சொல்வது என்ன?