Shocking Video: உத்தரபிரதேசத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்து இளைஞர் மாரடைப்பால் சுருண்டு விழுந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


இளைஞருக்கு மாரடைப்பு:


சமீப காலமாக இளைஞர்களுக்கிடையே ஏற்படும் திடீர் மரணங்கள் அதிகரித்துள்ளது.  அதாவது, கடந்த சில காலமாகவே இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு சம்பவங்கள் ஏற்படுவது கணிசமாக அதிகரித்துள்ளது. அதிலும், குறிப்பாக கொரோனா பாதிப்பிற்கு பிறகு இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்தது.  வழக்கம்போல் வேலை செய்யும் இளைஞர்கள் திடீரென மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. 


இந்த நிலையில், தற்போது உத்தரபிரதேசத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது, உத்தர பிரதேச மாநிலம்  லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் தெருவில் நடந்து சென்ற இளைஞருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. மாரடைப்பு ஏற்பட்ட இளைஞர் மயங்கி விழுந்துள்ளார். அப்போது, அவருக்கு பின்னால் வந்த கார் ஒன்றும் அவர் மீது ஏற்றிச்சென்றுள்ளது.  இதனால், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 


வீடியோ வைரல்:


இவர் சுமித் மவுரியா (22) என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவத்தின் காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில், கையில் ஒரு பையை வைத்துக்கொண்டு சாலையில் நடந்து செல்கிறார். சாதாரணமாக நடந்து சென்று கொண்டிருந்த இளைஞர், திடீரென மயங்கி விழுந்துள்ளார். 






அப்போது, அதே சாலையில் வந்துகொண்டிருந்த கார் ஒன்று, இவர் மீது ஏறி சென்றுள்ளது போன்று வீடியோவில் பதிவாகி உள்ளது. இதனால், இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அக்கம்பக்கத்தினர் இவரை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


அப்போது , மருத்துவர்கள் இவரை பரிசோதனை செய்ததில் இவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சாலையில் சென்றுகொண்டிருந்து இளைஞர் மாரடைப்பால் சுருண்டு விழுந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.




மேலும் படிக்க


மசூதியின் சர்ச்சைக்குரிய பகுதியில் இந்துக்கள் வழிபட அனுமதி... அயோத்தி வழியில் ஞானவாபி.. நடந்தது என்ன?


CM MK Stalin:ரூ.400 கோடி முதலீடு செய்ய உறுதியளித்த ‘ரோக்கா’ நிறுவனம் - 200 பேருக்கு வேலைவாய்ப்பு!