watch Video: உத்தரபிரதேசத்தில் பெண் வழக்கறிஞர்கள் இரண்டு பேர் நீதிமன்ற வளாகத்தில் ஒருவரைக்கொருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் நீதிமன்றத்தில் இரண்டு பெண் வழக்கறிஞர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. அந்த இரண்டு வழக்கறிஞர்களும் ஒருவரைக்கொருவர் முடியை இழுத்து கொண்டு சண்டையில் ஈடுப்பட்டனர். அங்கு இருக்கும் சக வழக்கறிஞர்கள் தடுத்து நிறுத்தினர்.
அப்போதும் கூட இரண்டு வழக்கறிஞர்கள் சண்டையை நிறுத்தவில்லை. ஒருவரைக்கொருவர் தள்ளிவிட்டு கன்னத்தில் அறைந்து, முடியை பிடித்து அடித்துக் கொண்டிருந்தனர். சக வழக்கறிஞர்கள் சமாதானம் செய்த பிறகும் கூட, ஒரு பெண் தள்ளி நின்றிருந்த போது, மற்றொரு பெண் வழக்கறிஞர் அந்த பெண்ணை இழுத்து கீழே தள்ளி கன்னத்தில் அறைந்தார். அதில் ஒருவர் மூத்த வழக்கறிஞராக இருப்பதாக கூறப்படுகிறது. அந்த மூத்த வழக்கறிஞருக்கு ஜுனியர் ஆக இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் அந்த சண்டையை சக வழக்கறிஞர்கள் தடுத்து நிறுத்தியும் இரு பெண்கள் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டனர். அப்போது நீதிமன்ற வளாகத்தில் இருந்த பெண் காவலர் ஒருவர் இருவரையும் சமாதானம் செய்ய முயன்றார். அப்போதும் கூட இரண்டு பெண்கள் சண்டைய நிறுத்தவில்லை என கூறப்படுகிறது. பின்பு போலீசார் சண்டையை தடுத்து நிறுத்தி சமாதானம் செய்து வைத்தார். இந்த சம்பவம் நீதிமன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் என்ன காரணம், எதற்காக தகராறில் ஈடுபட்டனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வழக்கறிஞர்களை இதுபோன்ற தகராறில் ஈடுபடுவது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த வீடியோ குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது, இந்த சம்பவத்திற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் பதிலளிக்க வேண்டும். இந்த மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பதை மக்களுக்கு கூற வேண்டும் என அந்த வீடியோவிற்கு பதிலளித்தனர். பின்பு மற்றொருவர் வழக்கறிஞர்களால் எதையும் செய்ய வேண்டும் என்பதை இந்த வீடியோ உணர்த்துவதாக தெரிவித்திருந்தார். இதுபோன்ற பலர் இந்த வீடியோவிற்கு பதிலளித்த வருகின்றனர்.
மேலும் படிக்க : RahulGandhi Viral Pic : "ஆட்டுக்குட்டியை சுமந்த ராகுல்காந்தி..." இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!