ஹைதராபாத் ஐபிஎஸ் சட்டக் கல்லூரி விடுதி அறையில் மாணவர் ஒருவரை அடித்து, குறிப்பிட்ட மத ஸ்லோகத்தை பாடும்படி கட்டாயப்படுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


தெலங்கானா ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள ஐபிஎஸ் ( IBS) கல்லூரி ஆண்கள் விடுதியில் நவம்பர் 11-ஆம் தேதி அன்று 20 பேர் கொண்ட கும்பல் ஹிமாங்க் பன்சால் என்ற சட்டக்கல்லூரி மாணவரை கொடூரமாக தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.  ஹிமாங்க் பன்சால் இருக்கும் விடுதி அறைக்கு 20 பேர் கொண்டு கும்பல் சென்றது. அப்போது ஹிமாங்க் பன்சாலை உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் தாக்கியதாக கூறப்படுகிறது. 






மேலும், அவரை நிர்வாணமாக்கி, ஆடைகளை கிழித்து, எட்டி உதைத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, தன்னை 20 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தாக்கியதாகவும், பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தன்னை முகத்தில் குத்தி, அறைந்து, அடிவயிற்றுப் பகுதிகளில் உதைத்து, பிறப்புறுப்பை தாக்கி, சில ரசாயனங்கள் மற்றும் பவுடர்களை உண்ணும்படி வற்புறுத்தி உள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.


இது குறித்து சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகியது. அதில் ஹிமாங்க் பன்சாலை,ஒரு நபர் கண்ணத்தில் அறைந்து  குறிப்பிட்ட மத ஸ்லோகத்தை பாடும்படி கட்டாயப்படுத்தினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி விமர்சனத்தை தூண்டியுள்ளது.






மேலும் ஒரு மாணவர் தனது பிறப்புறுப்பை ஹிமாங்க் பன்சாலின் வாயில் வைக்க முயன்றதாக கூறப்படுகிறது. அவரின் ஆடைகளை கிழித்து சாகும் வரை இந்த ஸ்லோகத்தை கூற வேண்டும் என கட்டாயப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 


இதுகுறித்து போலீசார் கூறுகையில், “பாதிக்கப்பட்ட மாணவர் தனது விடுதி அறையில் 20 நபர்களால் உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாக புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தெலுங்கானா ராகிங் தடைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.


மேலும் படிக்க


TN Rain Alert: அடுத்த 3 மணிநேரம்..! 28 மாவட்டங்கள்..! பொளக்க போகுது மழை..! எச்சரித்த வானிலை மையம்..