இந்தியாவில் அரசியல் களத்தில் தன் அதிரடி நடவடிக்கைகள், துணிச்சலான கருத்துகளால் என்றும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்கும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, (Mamata Banerjee,) தற்போது momos செய்யும் வீடியோ அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 


 மேற்கு வங்க மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றான டார்ஜிலிங் சென்றுள்ள மம்தா, அங்கிருக்கும் கடை ஒன்றின் சமையல் அறையில் MoMo தயார் செய்யும் வீடியோ இணையத்தில் ட்ரெண்ட் ஆகி உள்ளது.


இதை திரிணாமுல் காங்கிரஸின் இளைஞர் அணி உறுப்பினர் DIPANKAR KUMAR DAS தனது டிவிட்டர் பக்கத்தில் பகிந்துள்ளார். 






டார்ஜிலிங் சௌராஸ்தாவில் கோர்க்காலாந்து பிராந்திய நிர்வாகத்தின் (ஜிடிஏ) பதவியேற்பு விழாவில் பங்கேற்க மூன்று நாள் பயணமாக அங்குச் சென்றுள்ள மம்தா, அங்கு வாழும் மக்களின் வாழ்வின் வளர்ச்சிக்கு மாநில அரசு அனைத்து ஆதரவையும் வழங்கும் என உறுதியளித்தார்.






மம்தா இதுபோன்ற தனித்துவமான செயல்களை செய்வது ஒன்றும் புதிதல்ல. இரண்டு நாட்களுக்கு முன், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் முதலமைச்சர் மம்தா பானி பூரி வழங்கும் இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. 






இதேபோல் கடந்த மாதம் மேற்கு வங்கத்தின் அலிபுர்துவார் மாவட்டத்தில் நடைபெற்ற பழங்குடியினர் திருமண நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி பழங்குடியினருடன் இணைந்து நடனம் ஆடிய வீடியோ, மம்தா பானர்ஜி டீ தயாரித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அனைவராலும் நெகிழ்ச்சியுடன் பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Watch Video:டார்ஜிலிங் மக்களுக்கு பானிபூரி வழங்கிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி!




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.