கர்நாடகா மாநிலத்தில் மாநில அளவிலான கிக்பாக்சிங் குத்துசண்டை போட்டி நடைபெற்று வந்தது. இந்தப் போட்டியில் ஒரு அசம்பாவித சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. அதாவது போட்டியின்போது வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அந்த காயம் காரணமாக வீரர் உயிரிழந்துள்ளார். 


இந்நிலையில் அந்தச் சண்டை தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் நிதின் என்ற குத்துச்சண்டை வீரர் போட்டியின் போது அடி வாங்கி கீழே விழும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதன்பின்னர் அந்த வீரருக்கு முறையாக மருத்துவ உதவி அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன்காரணமாக நிதின் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 






இந்தச் சூழலில் போட்டி ஏற்பாட்டாளர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் ஏற்பட்ட குறைபாடுகள் தொடர்பாகவும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். குத்துச்சண்டை போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக வீரர் ஒருவர் மரணம் அடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


கடந்த மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டி ஒன்றில் வீரர் ஒருவர் மயக்கம் அடைந்து கீழே விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஆஃப்பிரிக்காவின் குத்துச்சண்டை சம்மளேனம் சார்பில் லைட்வெயிட் பிரிவு குத்துச்சண்டை போட்டி நடத்தப்பட்டது. 






இதில் சிம்சோ புல்தேசி மற்றும் சிப்சேஹில் ஆகியோர் மோதினர். 10 சுற்றுகள் கொண்ட போட்டியில் இரு வீரர்களும் சமமாக சண்டை செய்தனர். இந்தப் போட்டியின் கடைசி சுற்றின் போது திடீரென்று சிம்சோ புல்தேசி சக வீரரை பார்த்து சண்டை இடாமல் திரும்பி சண்டையிட்டார். அப்போது அவரை நடுவர் தடுத்து பார்த்த போது அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. தற்போது அதேபோன்று ஒரு சம்பவம் இந்தியாவில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண