Watch Video: தண்ணீரில் தத்தளிக்கும் விமானங்கள்! பார்க்கவே பரிதாப நிலையில் கொல்கத்தா ஏர்போர்ட்!

மேற்கு வங்காளத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் சூழலில், கொல்கத்தா விமான நிலையம் வெள்ளத்தில் மிதந்து வருகிறது.

Continues below advertisement

இந்தியாவின் பல மாநிலங்களிலும் சமீபநாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள மேற்கு வங்கத்தில் உள்ள கொல்கத்தா, ஹவுரா, சால்ட் ஏரி, பாரக்போர் உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

Continues below advertisement

வெள்ளத்தில் மிதக்கும் கொல்கத்தா விமான நிலையம்:

கொல்கத்தாவில் தொடர்ந்து மழை பெய்து வந்த காரணத்தால், அங்குள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்தின் உள்ளே மழைநீர் வெள்ளமாக தேங்கியது. ஓடுதளம் உள்பட விமான நிலையத்தில் தண்ணீர் தேங்கியதால் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது.

ஓடுதளங்கள் மட்டுமின்றி விமான நிலையத்தின் உள்ளே விமானத்தை நோக்கி பயணிகளை பேருந்தில் ஏற்றி வரும் வழியிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதனால், பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். தண்ணீரை வெளியேற்றும் பணியில் அதிகாரிகளும், பணியாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடரும் மழை:

கொல்கத்தா மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகள் தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும், அடுத்த 12 மணி நேரத்திற்கு ஹவுரா, பஸ்சிம் பர்தமான், பிர்பூம், புர்பா பர்தமன், ஹூக்ளி, நாடியா மற்றும் வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கனாஸ் பகுதிகளில் அடுத்த 12 மணி நேரத்திற்கு தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

கனமழை காரணமாக கொல்கத்தா நகரில் 30.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியது. கொல்கத்தா உள்பட அந்த மாநிலத்தின் மேற்கு மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. புருளியா, முர்ஷிதபாத், மால்டா, கூச்பெகார், ஜல்பைகுரி, டார்ஜிலிங் மற்றும் கலிம்போங் ஆகிய இடங்களுக்கு கனமழை மற்றும் மிக கனமழை வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியது.

மேலும் படிக்க: IG Bhavaneeswari : ”மேற்கு மண்டலத்தின் முதல் பெண் ஐ.ஜி” யார் இந்த பவானீஸ்வரி IPS..?

மேலும் படிக்க: Wayanad: வயநாடு சோகம்! கர்ணனாக மாறிய கர்னல் மோகன்லால் - 3 கோடி ரூபாய் நிதி உதவி

Continues below advertisement