காதல் தோல்வியால் குடித்துவிட்டு இளம்பெண் நடுரோட்டில் ரகளை செய்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.


வீடியோ வைரல்:


காதல் தோல்வியால் ஏற்படும் வலி என்பது ஆண், பெண் என யாருக்கும் பாகுபாடு காட்டாது. அதை கடந்து செல்வது என்பது அவ்வளவு எளிதானதும் கிடையாது. காதலை மறக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான செயல்களில் ஈடுபடுவர். அந்த வகையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த இளம்பெண் செய்த காரியம் தொடர்பான, வீடியோ இணையத்தில் வைரலாகி கடும் எதிர்ப்புகளை பெற்றுள்ளது.


இதுதொடர்பாக ஒருவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், காதலில் கிடைத்த தோல்வியால் பெண் செய்த கலாட்டா.. இது குவாலியரின் பூல் பாக் சந்திப்பில் நடந்த சம்பவம்" என குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், இந்த காரணம் உண்மையா என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.






கலாட்டாவில் ஈடுபட்ட பெண்:


வெள்ளை நிற பேண்ட், கருப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான டீ-ஷர்ட் அணிந்து பெண் ஒருவர் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளார். அவ்வழியாக வந்த கருப்பு நிற காரை தடுத்து நிறுத்தியதோடு, உள்ளே இருந்தவர்களை தகாத வார்த்தைகளில் பேசியுள்ளார். தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்தவரை இடைமறித்து அவரிடம் இருந்து வாகனத்தை பறித்துக்கொண்டு ஓட்டினார். பின்னே வந்த ஆட்டோ ஒன்றையும் இடித்துள்ளார். சாலையின் நடுவே இருந்த தடுப்பை கீழே தள்ளியதோடு, அவ்வழியாக வந்த கார் ஒன்றின் மீது ஏறி அமர்ந்து பயணம் செய்துள்ளார்.  இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெறிசல் ஏற்பட்டு, நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்து இருந்தன.  இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.


சமாதான முயற்சி:


காரின் மீது இருந்து இறங்க மறுத்த அந்த பெண்ணிடம், அவ்வழியாக வந்த பெண்கள் சிலர் சமாதான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும், அங்கிருந்து நகர மறுத்த பெண் காரின் ஒட்டுனரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து அந்த பெண் வலுக்கட்டாயமாக அங்கிருந்து அழைத்து வரப்பட்டு சாலையோரம் அமர வைக்கப்பட்டார். இதனிடையே, தகவலறிந்து அங்கு வந்த போலீசார், அந்த பெண்ணை சம்பவ இடத்தில் இருந்து வெளியேற்றியதாக கூறப்படுகிறது. அதேநேரம், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட அந்த பெண் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.