Delhi Airport Emergency: பதற்றம்.. டெல்லி விமான நிலையத்தில் எமர்ஜென்சி நிலை...! நடந்தது என்ன?

டெல்லியில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட சரக்கு விமானத்தின் மீது பறவை மோதியதை அடுத்த விமான நிலையத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. 

Continues below advertisement

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று முழு அவசர நிலை அறிவிக்கப்பட்டது. டெல்லியில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட சரக்கு விமானத்தின் மீது பறவை மோதியதை அடுத்த விமான நிலையத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. 

Continues below advertisement

டெல்லி விமான நிலையத்தில் திடீரென அவசரநிலை பிரகடனப்படுத்தியதால் பயணிகள் பெரும் பதற்றத்திற்கு ஆளாகினர். 

தொடரும் விமான விபத்துகள்:

சமீப காலமாக, விமான விபத்துகள் அதிக அளிவில் நடந்து வருகிறது. அந்த வகையில், மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவுக்கு நேபாள ஏர்லைன்ஸின் ஏ-320 விமானம் சென்றது. அப்போது, டெல்லியில் இருந்து காத்மாண்டுவுக்கு சென்ற ஏர் இந்தியா விமானத்துடன் ஏ-320 விமானம் கிட்டத்தட்ட மோதி விபத்துக்குள்ளாகவிருந்தது.

ஏர் இந்தியா விமானம் 19,000 அடியில் இருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்த போது நேபாள ஏர்லைன்ஸ் விமானம் அதே இடத்தில் 15,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. நல்வாய்ப்பாக, ரேடாரில் இரண்டு விமானமும் அருகருகே சென்று கொண்டிருந்தது பதிவானது. இதையடுத்து, நேபாள ஏர்லைன்ஸ் விமானம் 7 ஆயிரம் அடி உயரத்தில் இயக்கப்பட்டது. இதனால், பெரும் விபத்து சம்பவம் தவிர்க்கப்பட்டது. 

அதேபோல, இந்திய ராணுவத்திற்கு சொந்தமான விமானங்கள் விபத்தில் சிக்குவதும் தொடர் கதையாகி வருகிறது. சமீபகத்தில், அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

அருணாச்சலப் பிரதேசத்தில் விபத்து:

அருணாச்சலப் பிரதேசத்தில் திராங் மலைப்பகுதியில் உள்ள மண்டாலா மலைப்பகுதியில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. விமானத்தில் பயணித்த இரண்டு விமானிகளும் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

பாலகாட் மாவட்டத் தலைமையகத்திலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவில், விபத்து நடந்த இடத்திற்கு அருகில் உள்ள லாஞ்சி மற்றும் கிர்னாபூர்  மலைப்பகுதியில் ஒரு ஆணின் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

கடந்த 2021ஆம் ஆண்டு, டிசம்பர் 8ஆம் தேதி, நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரிக்கு முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட, 14 பேர், கோவை சூலுார் விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டனர். குன்னுார் காட்டேரி அருகே நஞ்சப்பா சத்திரத்தில் நிலவிய கடும் மேகமூட்டம் காரணமாக, ஹெலிகாப்டர் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

செடிகள் சூழ்ந்த இடத்தில் பிபின் ராவத் உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்டார். மேலும் ராணுவப் பயிற்சி கல்லுாரி குரூப் கேப்டன் வருண் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்.

இந்த கோர விபத்தில், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், பிரிகேடியர் எல்.எஸ்., லிடர், லெப்., கர்னல் ஹர்ஜிந்தர் சிங், குருசேவக், ஜித்தேந்திர குமார், நாயக் விவேக் குமார், சாய் தேஜா, ஹவில்தார் சட்பல் உட்பட, 13 பேர் இறந்தனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola