Watch Video : நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக காரை நிறுத்தி நடனமாடிய 2 பெண்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
காசிபாத்தில் நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக கார் நிறுத்தி நடனமாடிய 2 பெண்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் காசிபாத் நெடுஞ்சாலையில் 2 பெண்கள் பாலிவுட் பாடலுக்கு நடனமாடினார். போக்குவரத்துக்கு இடையூறாக 2 பெண்கள் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலானது. இதனை அடுத்து, 2 பெண்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கௌசாம்பி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து அவர்கள் காரையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் கூறியதாவது "டிசம்பர் 10-ஆம் தேதி சமூக ஊடகங்களில் வீடியோ வைரலானதை அடுத்து, 2 பெண்கள் உட்பட 3 பேரை கைது செய்யப்பட்டனர். சாலையை மறித்து நடனமாடியதாக அவர்கள் மீது கௌசாம்பி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக, ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் உப்பங்கலா கிராமத்தில் நடந்த கண்காட்சியில் நிர்வாண நடனம் நடத்திய 10 பேரை ஆந்திர மாநில போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் ஏப்ரல் 14 மற்றும் 15 ஆம் தேதி இடைப்பட்ட இரவில் அதிகாலை 3 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.
வைரலான வீடியோவின் அடிப்படையில், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தால்ரேவு மண்டலத்தின் உப்பங்களா கிராமத்தில் பொலேறுஅம்மா திருவிழாவில் நிர்வாண நடனம் ஏற்பாடு செய்ததற்காக 10 பேர் கொரிங்கா காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க