Jammu Kashmir :ஜம்மு காஷ்மீரில் ரோந்த பணியில் இருந்த ராணுவ வாகனம் பள்ளித்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்தியாவில் கடந்த சில நாட்களகவே வட மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் அடர் பனி காணப்படுகிறது. டெல்லி, அரியானா, உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் கடும் மூடுபனி நிலவி வருகிறது. இதனால் மக்கள் தங்களில் அன்றாட வேலைகளை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதே போன்று மலைபிரதேச மாநிலங்ளாக ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. இந்த கடுமையான பனிப்பொழிவிலும், ராணுவ வீரர்கள் தங்களின் பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் நேற்று மாலை 6.30 மணியவளில் குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதிக்கு ரோந்து பணிக்காக ராணுவ வாகனத்தில் மூன்று பேர் சென்று கொண்டிருந்தனர். அந்த பகுதியில் சில நாட்களாகவே பனிபொழிவு அதிக அளவில் இருப்பதால் பாதைகளில் பனி படர்ந்திருந்தது. அப்போது பள்ளத் தாக்கில் எதிர்பாராத விதமான ராணுவ வாகனம் கவிழ்ந்துள்ளது.
இதை அடுத்து, அதில் பயணித்த ராணுவ வீரர்கள் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தை இந்திய ராணுவம் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது. நைப் சுபேதார் பர்ஷோதம் குமார் (43), ஹவில்தார் அம்ரித் சிங்(39), சிப்பாய் அமித் சர்மா (23) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இதுகுறித்து ஜூனியர் கமிஷண்டு அதிகாரி கூறுகையில், " ஜம்மீ காஷ்மீரில் கடந்த சில நாட்களாகவே கடும் பனி நிலவி வருகிறது. இதனால் இதுபோன்ற விபத்துகள் அதிகளவில் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்” என்றார்.
மேலும் ராணுவ வீரர்கள் மூன்று பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் வழக்கம்போல் ரோந்து பணிக்கு செல்லும்போது விபத்து ஏற்பட்டிருக்கிறது. நேற்று மாலை 6.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அதில் ராணுவ வீரர்களான நைப் சுபேதார் பர்ஷோதம் குமார், ஹவில்தார் அம்ரித் சிங், சிப்பாய் அமித் சர்மா ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது” என்று அவர் தெரிவித்தார்.