குழந்தையை கொம்பால் முட்டி கீழே சாய்த்து கொடூரமான முறையில் தாக்கிய காளையின் விடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
சிறுவனை தாக்கிய காளை
உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் இருந்து அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று வெளியாகிய நிலையில் பார்ப்பவர்களை பதற்றத்துக்கு உள்ளாக்கி உள்ளது. வீட்டிற்கு வெளியே தனது தாத்தாவுடன் வாக்கிங் சென்ற நான்கு வயது சிறுவன் ஒருவனை வழிமறித்த காளை ஒன்று தாக்கிய சம்பவத்தில், அந்த சிறுவன் பலத்த காயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோவும் வெளியாகிய நிலையில் அந்த விடியோவில், காளை ஒன்று குழந்தையை மிதிப்பது தெரிகிறது.
சிசிடிவி கேமராவில் பதிவு
அலிகர் பகுதியில் காளைகள் தாக்குதல் சம்பவம் அதிகரித்து வரும் நிலையில், தற்போது நான்கு வயது குழந்தையை கொடூரமான முறையில் தாக்கும் காளையின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் வியாழக்கிழமை காலை 7.40 மணியளவில் நடந்தேறியுள்ளது. நடந்த முழு சம்பவமும் அலிகரின் தானிபூர் மண்டி பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
வீடியோ காட்சிகள்
வீடியோவில் மெதுவாக நடக்கும் 4 வயது ஆண் குழந்தை தனது தாத்தாவுடன் தெருவில் நடந்து கொண்டிருந்தது, அந்த நேரத்தில் தாத்தா குழந்தையை தெருவில் விட்டுவிட்டு சில நொடிகள் தள்ளி சென்றுவிட்டார், அன்ஸ்ஹ நேரம் பார்த்து ஒரு காளை ஓடி வந்து சிறுவனைத் தாக்குகிறது. காளை முதலில் தனது கொம்பினால் சிறுவனை தாக்கியது, பின்னர் அந்த சிறுவனை மிதித்து அவர் மீது அமர்கிறது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு தாத்தா ஓடி வந்து குழந்தையை வெளியே எடுக்கிறார். வீடியோவில் பதிவாகியுள்ள இந்த பயங்கரமான காட்சிகள் பார்ப்போரை பதற வைக்கிறது.
காளைகளை பிடிக்க உத்தரவு
இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, காளையைப் பிடிப்பதற்காக மாநகராட்சி குழு ஒன்று தானியப்பூர் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இத்துடன் அப்பகுதியில் சுற்றித்திரியும் மற்ற காளைகளையும் பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காளை தாக்கியதில் காயமடைந்த பிரதீக்கின் தந்தை மகிபால் சிங், சிறுவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், அங்கு மருத்துவர்கள் சிறுவனுக்கு சிகிச்சை அளித்ததாகவும் கூறினார். சிறுவனின் முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளன, ஆனால் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.