மாநிலங்களவையில் முதல் காதல் குறித்து பேசிய ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சத்தாவை குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு கலாய்த்த சம்பவம் உறுப்பினர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.


திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஒரே வார்த்தையில் சாமர்த்தியமாக பதில் அளிப்பதில் வெங்கையா நாயுடு வல்லவர் ஆவார்.


 






வெங்கையாவின் பதவி காலம் ஆகஸ்ட் 10ஆம் தேதியோடு முடிவடைகிறது. இச்சூழிலில், அவரை வழி அனுப்பி வைக்கும் விதமாக பல எம்பிக்கள் மனம் திறந்து பேசினர். அப்போது பேசிய ராகவ் சத்தா, "ஒரு நபர் தனது முதல் அனுபவத்தை எப்போதும் நினைவில் கொள்வார். பள்ளியின் முதல் நாள், முதல் பள்ளி முதல்வர், முதல் ஆசிரியர். முதல் காதல். எனது முதல் மாநிலங்களவை தலைவராக நான் உங்களை எப்போதும் நினைவில் கொள்வேன்" என்றார்.


இதற்கு இந்தியில் பதில் அளித்த வெங்கையா, "ராகவ், நீங்கள் ஒரே முறைதான் காதலித்திருப்பீர்கள் என நான் நம்புகிறேன்...முதல் முறை, இரண்டாவது முறை, அப்படி நடந்திருக்கிறதா? இல்லைதானே. சரி. நீங்கள் ஒரு முறை மட்டுமே காதலித்திருக்கிறீர்கள், சரியா?" என்றார்.


இதற்கு சிரித்தபடியே பதில் அளித்த ராகவ், "எனக்கு அந்த அனுபவம் இல்லை, சார். ஆனால், அது நல்லதுதான்" என்றார். உறுப்பினர்களின் சிரிப்பலைக்கு மத்தியில் பேசிய வெங்கையா, "ஆம், முதல் காதல்தான் சிறப்பானது. அதே காதல் என்றும் நிலைத்திருக்க வேண்டும்" என்றார்.


நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாஜக தலைவர் ஜேபி நட்டா, திரிணாமுல் கட்சியின் டெரெக் ஓ பிரையன் உள்ளிட்டோர் இன்று அவையில் கலந்து கொண்டனர்.


முன்னதாக, வெங்கையா குறித்து பேசிய பிரதமர் மோடி , உறுப்பினர்களை அவர்களின் தாய்மொழியில் பேச ஊக்குவித்ததற்காகவும், இந்தி அல்லாத மாநிலங்களை சேர்ந்த எம்பிக்களை இந்தியில் பேச ஊக்குவித்ததற்காகவும் பாராட்டினார். 


சாமர்த்தியமாக ஒரே வார்த்தையில் பதில் அளிக்கும் வெங்கையாவை பாராட்டி பேசிய மோடி, "உங்களின் ஒன் லைனர்கள் சாமர்த்தியமாக இருக்கும். அதற்குப் பிறகு சொல்ல எதுவும் இல்லை. உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் விரும்பப்படுகிறது, மதிக்கப்படுகிறது" என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண