ஒரு பெண் எப்போதுமே மல்டி டாஸ்கராகத்தான் இருப்பாள் . அதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. வீட்டு வேலைகள் , குழந்தைகள் பராமரிப்பு , அலுவலக வேலை , செல்ஃப் கேர் என அவர்களுக்கான ஒரு நாள் பட்டியல் நீண்டுக்கொண்டே செல்லும். அப்படித்தான் தனது குழந்தையுடன் தூய்மை பணியாளரான பெண் ஒருவர் , வீதிகளை சுத்தம் செய்யும் காட்சிகள் இணைய வைரலில் இடம் பிடித்துள்ளது.


தாய் அன்பிற்கு ஈடில்லை:


தினமும் வேலைக்கு செல்லும் எத்தனையோ பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் அலுவலகம் செல்வதை பார்த்திருப்போம். அமைச்சர்கள்  முதல் அதிகாரிகள் வரை, பெண்கள் தங்கள் குழந்தைகளை அலுவலகத்திற்கு எடுத்துச் செல்வதையும் , கேபினெட் கூட்டத்தில் பசியாற்றும் எத்தனையோ நெகிழ்ச்சியான சம்பவங்களை பார்த்திருக்கிறோம். அதில் துப்புறவு தொழிலாளி தாய் மட்டும் விதி விலக்கா என்ன ! 


முதுகில் குழந்தை ! கையில் துடைப்பம் !


ஒடிஷா மாநிலம் மயூர்பஞ்ச் பகுதியில் 10 ஆண்டுகளாக துப்புறவு பணிகளை செய்து வருபவர் லக்‌ஷ்மி முகி. இவருக்கு சில மாதங்களே ஆன கைக்குழந்தை ஒன்று உள்ளது. வீட்டில் குழந்தையை பார்த்துக்கொள்ள யாரும் இல்லாததால் . துணி ஒன்றின் உதவியுடன் , தனது முதுகுபுறத்தில் குழந்தையை சுமந்துக்கொண்டு வீருநடை போட்டு துடைப்பத்துடன் வேலைக்கு கிளம்பிவிட்டார் லக்‌ஷ்மி. 






ட்விட்டர் வைரல் :



அவர் குழந்தையை சுமந்துக்கொண்டு வீதிகளில் தூய்மை பணி செய்யும்  ட்விட்டரில் வைரலானது .இந்த வீடியோ  இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும் 7,400 க்கும் மேற்பட்ட லைக்ஸ்களையும் பெற்றுள்ளது. 


என் கடமை சார் !


இது குறித்து ANI நிறுவனத்திற்கு பேட்டியளித்த லக்‌ஷ்மி மகி, “நான் கடந்த 10 ஆண்டுகளாக பரிபாடா நகராட்சியில் பணிபுரிந்து வருகிறேன். வீட்டில் தனியாக உள்ளதால் குழந்தையை முதுகில் சுமந்து கொண்டு பணிபுரிய வேண்டும். இது எனக்கு பிரச்சனை இல்லை, எனது கடமை “ என்றார் சாதராணமாக.






வாழ்த்தும்! ஆதரவும்!


அவரது நிலை குறித்து அறிந்த ​​பரிபாடா நகராட்சித் தலைவர் பாதல் மொஹந்தி “ அவர் சில தனிப்பட்ட காரணங்களால்தான் குழந்தையை சுமந்து வேலைக்கு வருகிறார்.அவரது தேவைகளை கண்காணிக்க நான் எனது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன், ஏதேனும் பிரச்சனை இருந்தால் நாங்கள் அவருக்கு உதவி செய்வோம் “ என்றார்.  இது தவிர சமூக வலைத்தளங்களில் ”கௌரவமான பெண்ணின் முழு அர்ப்பணிப்புக்கு நான் தலைவணங்குகிறேன்!இதுபோன்ற எண்ணற்ற உறுதியான தொழில் வல்லுநர்களால்தான் இந்தியா தலைத்தோங்குகிறது.பாலிவுட்டில் இருந்து கால்சட்டை இல்லாமல் பேசுவதை விட, உண்மையான், உத்வேகமான பெண்ணாக இவர் இருக்கிறார்” என்றும் “குழந்தையின் படிப்பிற்காக நாம் ஏதாவது செய்ய வேண்டும் “ என சிலரும் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.