அரசியலை பத்தி கேக்குறது என் வேலை இல்லை:


ஒரு சாதாரண மனிதராக,பிரதமர் நரேந்திர மோடியிடம் மிக எளிமையான, நேரான கேள்விகளைக் கேட்க விரும்பியதாக பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் தெரிவித்தார். அரசியலில் அவர் என்ன செய்கிறார், என்ன செய்யவில்லை என்பதைப் பற்றி கேட்பது எனது வேலை இல்லை என  நடிகர் அக்‌ஷய் குமார் தெரிவித்தார்.






அக்ஷய்குமார் பேட்டி:




நடிகர் அக்சய் குமார், ஏ.என்.ஐ செய்தி முகமைக்கு பேட்டி அளித்தார். அதில் பிரதமரிடம் அக்சய் குமார் பேட்டி எடுத்தது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அக்‌ஷய் குமார், அவருடன் அமர்ந்து பேசுவது எனக்கு பெருமையாக இருந்தது. பிரதமரை பற்றிய சிறப்பம்சம் என்னவென்றால், அவர் தன்னை எவ்வாறு வடிவமைக்க வேண்டும் என்று அவருக்குத் தெரியும்.


அவர் என்னுடன் பேசினால், அவர் என்னை நோக்கி வடிவமைத்துக் கொள்வார், அவர் குழந்தைகளிடம் பேசினால், அவர்களின் வயதிற்கு ஏற்ப அவர் இருப்பார். தன்னை வடிவமைத்தும் கொள்ளும் திறன் அவரிடம் ஒரு பெரிய விஷயம் என  நடிகர் அக்ஷய் குமார் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.






மாம்பழம் பிடிக்குமா:


கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடியிடம், நடிகர் அக்சய் குமார் பேட்டி எடுத்தார்.அப்பேட்டி தொடர்பாக எதிர்க்கட்சிகள் பலரும் விமர்சனம் செய்தனர். மோடியிடம் மாம்பழம் பிடிக்குமா என என அக்சய் குமார் கேட்டார். இதை பலரும் கிண்டல் செய்து வந்தனர். இந்நிலையில் தற்போது ஏ.என்.ஐ-க்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடியிடம் பேட்டி எடுத்தது பெரும் பாக்கியம் என தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண