தமிழ்நாடு:
- ஏழை, எளிய மக்களுக்கான திட்டங்களில் தொய்வு இருக்கக் கூடாது: துறைவாரியாக ஆய்வு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
- ஆவடியில் ஜூன் 10 முதல் 13 பாரம்பரிய திருவிழா நடைபெறுகிறது என்று அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
- அமெரிக்காவிலிருந்து மீட்கப்பட்ட சிலைகள் தமிழக டிஜிபியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- கொடைக்கானலில் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்ததால் குளிர் அதிகரித்துள்ளது.
- மதுரை ஆவின் துணை ஆணையர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
- கடந்த நிதியாண்டில் தமிழ்நாட்டில் 3.25 லட்சம் வணிகர்கள் வரி செலுத்தவில்லை என்று தகவல்.
- 11 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
இந்தியா:
- அரசு இ-சந்தைகளில் கூட்டுறவு பொருட்களை விற்பனை செய்யலாம் என்று மத்திய அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது.
- நாடு முழுவதும் விடுபட்டவர்களுக்கு வீடு வீடாக தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக
- பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
- மகாராஷ்டிராவில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பு.
- 16 லட்சம் இந்திய கணக்குகள் சமூகத்திற்கு கேடு விளைவித்தாக கூறி வாட்ஸ் அப் தடைவிதித்துள்ளது.
உலகம்:
- ஆஸ்திரேலிய வரலாற்றில் முதல் முறையாக 13 பெண் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.
- ரஷ்ய படைகள் பல்வேறு பகுதிகளில் மீண்டும் தாக்குதல்
- இத்தாலியின் எட்னா எரிமலையில் இருந்து அக்னி
- குரங்கம்மையின் பரவும் திறன் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
விளையாட்டு:
- ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் ஜப்பான் அணியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெண்கலப்பதக்கத்தை வென்றது.
- மக்களுக்கு உதவும் வகையில் புதிய கல்வி செயலி ஒன்றை தொடங்க உள்ளதாக சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
- உலக குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற நிகத் ஸரீன் உள்ளிட்ட மூன்று குத்துச்சண்டை வீராங்கனைகளை பிரதமர் மோடி சந்தித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்