என்.எஸ்.டி.எல். (National Securities Depository Limited)நிறுவனத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியில், மேடை பேச்சின் நடுவே அந்நிறுனத்தின் நிர்வாக இயக்குநர் தண்ணீர் கேட்க, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தன் மேஜைமீது வைத்திருந்த குடிநீரை அவருக்கு வழங்கியது இணையத்தில் அனைவராலும் பாரட்டப்பட்டு வருகிறது.


என்.எஸ்.டி.எல். (National Securities Depository Limited,), எனப்படும் தேசிய பங்குகள் வைப்பு நிறுவனத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சி மும்பை உள்ள ஒரு ஹோட்டலில் நடைப்பெற்றது. நிகழ்ச்சியின்போது,  மேடை பேச்சின் நடுவே என்.எஸ்.டி.எல். – இன் நிர்வாக இயக்குனர் பத்மஜா, அங்கிருந்த ஒருவரிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டிருக்கிரார். அப்போது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) தனது மேஜை மீது இருந்த குடிநீரை கொண்டு வந்து வழங்கினார். இதனை கண்டு அரங்கத்தினர் அசந்து அவரின் எளிமையான செயலை பாராட்டினர். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி அனைவரின் பாரட்டினை பெற்று வருகிறது.




மும்பையில் என்.எஸ்.டி.எல்., வெள்ளி விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். மாணவர்களுக்கான முதலீட்டாளர் விழிப்புணர்வு திட்டத்தையும், (NSDL investor awareness programme for students - Market ka Eklavya), என்.எஸ்.டி.எல்லின் 25 ஆண்டு கால பயணத்தை சிறப்பிக்கும் அஞ்சல் தலையையும் வெளியிட்டார்.






முன்னதாக என்.எஸ்.டி.எல்.  நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பத்மஜா சுந்துரு பேசிக்கொண்டிருந்தார். நீண்ட நேரம் பேசியதால் அவருக்கு தண்ணீர் தேவைப்பட்டது. அங்கிருந்த ஒருவரிடம் தண்ணீர் தருமாறு கேட்டார். இதை கவனித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது மேஜை மீது வைக்கப்பட்டிருந்த குடிநீரை கொடுத்தார். மகிழ்ச்சியடைந்த பத்மஜா, அவரைப் பாராட்டி அன்புடன் நன்றி கூறினார். இதை அரங்கில் இருந்தவர்கள் கைத்தட்டி பாராட்டினர்.


இதை மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானும் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிந்து, நிதியமைச்சரின் எளிமையை  பாராட்டி உள்ளார்.