தெலங்கானா மாநிலத்தில் வேன் - லாரி நேருக்கு நேர் மோதி  ஏற்பட்ட விபத்தில்  9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


தெலங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டம் பகுதியில் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள நேற்று மாலை சிலாகிரி இருந்து  25 பேர் மினி வேனில் கிளிம்பியுள்ளனர். ஒன்வே நெடுஞ்சாலையில் வேன் சென்றுக் கொண்டிருந்தபோது, எதிரே வேகமாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக வேன் மீது மோதியது. வேன் - லாரி நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உடல் நசுங்கி சம்ப இடத்திலேயே உயிரிழந்தனர்.


எல்லாரெட்டியில் இருந்து பிட்லம் செல்வதற்காக வந்து கொண்டிருந்த வேன் மீது பிட்லம் பகுதியில் இருந்து நிசாம்சா நகர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி மோதி கடுமையான விபத்து ஏற்பட்டது.


15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், படுகாயமடைந்த சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.


இந்த விபத்து குறித்து எஸ்.பி. ஸ்ரீநிவாஸ் ரெட்டி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


பிரதமர் மோடி இரங்கல்:






இந்த விபத்து தொடர்பாக பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். சாலை விபத்தில் 9 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில்  இருந்து ( Prime Minister's National Relief Fund) தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண