வடகிழக்கு டெல்லியின் சீலம்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குளிர்சாதனப் பெட்டியில் அடைக்கப்பட்ட நிலையில் 50 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.


 






இதை காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். வெள்ளிக்கிழமை இரவு 7.15 மணியளவில், தனது உறவினர் தொலைபேசி அழைப்புகளை ஏற்கவில்லை என ஒரு நபர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து உள்ளார்.


இதையடுத்து, தகவல் கொடுத்த நபர், உறவினரின் வீடு அமைந்துள்ள கௌதம்புரிக்கு சென்று பார்த்தபோது, ​​குளிர்சாதனப் பெட்டியில் அவர் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், குளிர்சாதனப் பெட்டியில் சடலம் அடைக்கப்பட்டிருந்ததைக் கண்டதாக தெரிவித்தனர்


இறந்த நபர் ஜாகீர் என அடையாளம் காணப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் அவர் வீட்டில் தனியாக வசித்து வந்ததாகவும், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் தனித்தனியாக வேறு வீட்டில் வசித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.


 






இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொலைச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் துப்பு கிடைத்து இருப்பதாக போலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.


50 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் குளிர்சாதனப் பெட்டியில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டிருக்கும் சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மர்மமான முறையில் அவர் இறந்திருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண