யானைகள் இயல்பில் அமைதியாக இருக்கும் என்ற பெயர் பரவலாக உண்டு, ஆனால் தாங்கள் தற்காப்புக்காக, பாதுகாப்புக்காக வன்முறையின் எந்த எல்லைக்கும் செல்லும். பலரும் அதன் கோர முகங்களை நேரில் கண்டிருக்க வாய்ப்பில்லை. அதனை காட்டும் வகையில், இந்திய வன சேவை (IFS) அதிகாரி சுசாந்தா நந்தா ட்விட்டரில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். 


யானைகளை நெருங்கிய பயணிகள்


அந்த விடியோவில் சுற்றுலாப் பயணிகள் குழு ஒன்று காட்டுக்குள் யானைக் கூட்டத்தை நெருங்குவதைக் காண முடிகிறது. சில சிறிய யானைகளை கொண்ட அந்த யானை குழு ஒரு தெருவைக் கடந்து கொண்டிருந்தது. அந்த கூட்டம் நடுரோட்டிற்கு வந்ததும், சுற்றுலாப் பயணிகள் அவற்றை கேலி செய்யும் விதமாக விசித்திரமான ஒலிகளை எழுப்பத் தொடங்கினர். அவர்களின் பலத்த சத்தம் யானைகளை திடுக்கிட வைத்தது. சிறிய யானைகள் உடனடியாக சம்பவ இடத்திலிருந்து தப்பிக்க வேகமாக நடந்தன. 






அதிகாரி வெளியிட்ட விடியோ


இத்தகைய நடத்தையின் விளைவுகளைப் பற்றி எச்சரிக்கை அளிக்கும் விதமாக சுசாந்தா நந்தா எழுதினார், "சிறிய யானையைக் கொண்ட யானைக் கூட்டம் மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும். அதில் உங்கள் உயிரை பணயம் வைக்காதீர்கள். அவர்களை பாதுகாப்பான பாதையில் செல்ல அனுமதியுங்கள். அவர்களுக்குத்தான் முதல் உரிமை” என்று எழுதினார். ட்விட்டரில் 16 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ பதிவிடப்பட்டதில் இருந்து, 78,000 பார்வைகளைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில் 600 க்கும் மேற்பட்ட லைக்குகளை குவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்: Oommen Chandy Passes Away: அதிகாலையில் சோகம்.. முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி காலமானார்.. கேரளா காங்கிரஸ் அறிவிப்பு


ட்விட்டர் வாசிகள் கண்டனம்


சுற்றுலாப் பயணிகள் செய்ததை பார்த்து ட்விட்டர் வாசிகள் பலர் கண்டனம் தெரிவித்தனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர். ஒரு பயனர், "இவர்களை சிறையில் அடைக்க நடவடிக்கை எடுங்கள்" என்று கருத்து தெரிவித்தார்.


மற்றொரு பயனர் சிறிய யானைகளின் பண்பை குறித்து பேசினார், அவை "சப்சோனிக், சோனிக் மற்றும் அல்ட்ராசோனிக் ஒலிகளுக்கு அதிக உணர்திறன் கொண்டவை. இதுபோன்ற சத்தம் அவர்களுக்கு மிகவும் எரிச்சலூட்டும், குறிப்பாக சிறிய யானைகளுக்கு" என்று கருத்து தெரிவித்தார்.






யானைகள் சண்டையிடும் விடியோ


சில வாரங்களுக்கு முன்பு, மற்றொரு ஐஎஃப்எஸ் அதிகாரி சாகேத் படோலா இரண்டு யானைகள் சண்டையில் ஈடுபட்ட ஒரு கண்கவர் வீடியோவைப் பகிர்ந்திருந்தார். நகரும் வாகனத்தில் இருந்து பதிவு செய்யப்பட்ட அந்த வீடியோவில், இரண்டு யானைகள் தங்கள் தும்பிக்கைகளை நெரித்து கடுமையாக சண்டையிட்டன. சாகேத் போட்லா இந்த சண்டைக்கு "கிளாஷ் ஆஃப் தி டைட்டன்ஸ்" என்று பெயரிட்டார். யானைகளின் மிக அரிதான ஆக்ரோஷ முகம் அதில் தெரிந்ததால், பலரும் அந்த விடியோவை பகிர்ந்தனர். இந்த கிளிப் டிவிட்டர் தளத்தில் கிட்டத்தட்ட 39,000 பார்வைகள் மற்றும் நூற்றுக்கணக்கான லைக்ஸ்களை பெற்றது.