உத்தரகாண்ட் மாநிலத்தில் நள்ளிரவு நேரத்தில் ஓடும் இளைஞர் ஒருவரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


இந்த வீடியோவை இயக்குநர் வினோத் கப்ரி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில், “ நள்ளிரவில் காரில் சென்ற வினோத் கப்ரி, ஒரு சிறுவன் ஓடிக்கொண்டிருப்பதை  பார்க்கிறார். அதனைத் தொடர்ந்து அவர்களுக்குள் நடந்த சுவாரஸ்சியமான உரையாடலை இங்கு பார்க்கலாம்.. 


வினோத் அந்தச் சிறுவனிடம்: நான் உன்னை காரில் வீட்டில் கொண்டு விடுகிறேன் 


பிரதீப்: இல்லை வேண்டாம் நான் ஓடியே வீட்டிற்கு செல்கிறேன். 


வினோத்: சரி இருக்கட்டும், அப்படியென்றால் நீ ஏன் ஓடுகிறாய்


பிரதீப்: ஒவ்வொரு முறையும் வீட்டிற்கு நான் இப்படித்தான் ஓடுவேன். 


வினோத்: நீ எங்கே வேலை செய்கிறாய்


பிரதீப்: மெக்டோனாலில் வேலை செய்கிறேன்.






வினோத்: என்னுடைய காரில் உன்னை கொண்டு விடுகிறேன்.


பிரதீப்: வேண்டாம் இதை விட்டால் எனக்கு ஓடுவதற்கு நேரம் இல்லை.


வினோத்: சரி நீ எதற்காக ஓடுகிறாய்


பிரதீப்: நான் ராணுவத்தில் சேருவதற்காக..


வினோத்: சரி உன்னுடைய பெயர் 


பிரதீப்: பிரதீப் மெஹ்ரா


வினோத்: நீ எங்கிருந்து வருகிறாய் 


பிரதீப்: உத்தரகாண்ட் அல்மோரோ நகரில் இருந்து வருகிறேன்


வினோத் : ஏன் நீ காலையில் ஓடுவதில்லை.


பிரதீப்: காலையில் சமைத்து விட்டு வேலைக்கு செல்ல வேண்டும் என்பதால் என்னால் காலையில் ஓட முடியாது.


வினோத்: உன்னுடைய வயது என்ன?


பிரதீப்: வயது 19 


வினோத்: உன்னுடைய பெற்றோர்..?


பிரதீப்: எனது அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். எனது சகோதரருடன் நான் தங்கியிருக்கிறேன். 


வினோத்: இந்த வீடியோ வைரல் வீடியோ.


பிரதீப்: யார் என்னை அங்கிகரிக்க போறா 


வினோத்: வைரல் அப்படின்னா என்னனு தெரியுமா?


பிரதீப்: பராவாயில்லை நான் ஏதும் தவறாக சொல்லவில்லையே.. 


வினோத்: சரி எத்தனை கிலோமீட்டர் நீ ஓடி வருகிறாய்..


பிரதீப்: 10 கிலோமீட்டர்.. 


வினோத்: சரி எங்கே சாப்பிடுவாய்


பிரதீப்: நான் வீட்டிற்குச் சென்று சமைத்து சாப்பிடுவேன். 


வினோத்: சரி என்னுடன் வந்து சாப்பிடு வா..  


பிரதீப்:இல்லை என்னுடைய சகோதரர் காத்துக்கொண்டிருப்பான்


வினோத்: உன் சகோதரன் சமைக்க மாட்டாரா?


பிரதீப்: அவன் நைட் டூட்டி பார்க்கிறான்.


வினோத் : நான் உன்னை வீட்ல டிராப் பண்ணுறேனே? 


பிரதீப் : இல்ல அப்படி பண்ணா என் பயிற்சி பாதிக்கப்படும் வேண்டாம்


வினோத்: ஆல்தி பெஸ்ட்


இந்த உரையாடல் கலந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.