பாலாஜி மருந்தியல் கல்லூரியில் முதலாமாண்டு பயிலும் மாணவர், கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற கபடிப் போட்டியில் கலந்துகொண்டபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கபடி விளையாடிய மாணவருக்கு மாரடைப்பு


ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள மடகசிரா பகுதியைச் சேர்ந்த தனுஜ் குமார் நாயக் என்ற 18 வயது மாணவர், தனது நண்பர்களுடன் கபடி விளையாடிக் கொண்டிருந்தார். இவர் சமீபத்தில் தான் கல்லூரியில் சேர்ந்துள்ளார். முதலாம் ஆண்டு படித்து வந்த இவர், கபடிக் களத்தில் எதிர் அணியைச் சேர்ந்த ஒருவர் ரெய்டுக்கு வந்தபோது, மற்ற ஐந்து பேருடன் நின்று கொண்டிருந்தார். அப்போது, ​​திடீரென பின்னால் விழுந்த நாயக் அங்கேயே சரிந்த நிலையில் மாரடைப்பால் உயிரிழந்ததது தெரிய வந்துள்ளது. கபடி விளையாடிய மாணவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.



வெளியான வீடியோ


நடந்த இந்த முழு சம்பவமும் கேமராவில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. வீடியோவில் நாயக் மற்றும் அவரது குழு உறுப்பினர்கள் ஒன்றாக நிற்பதைக் காண முடிகிறது. "விளையாட்டு நடந்து கொண்டிருந்தபோது, மாணவர் தரையில் சரிந்தார், நாங்கள் உடனடியாக நாடித்துடிப்பைச் பார்த்தோம், அது மிகவும் பலவீனமாக இருந்தது," என்று அங்கு நின்றிருந்த நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் கூறியதாக மேற்கோள் காட்டி தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்: IND vs AUS: 4-வது டெஸ்ட்டை காணவரும் இந்திய - ஆஸ்திரேலிய பிரதமர்கள்.. அன்றைய முழு நாளும் இங்கேதானாம்..!


பெங்களூரு மருத்துவமனையில் 


அவர்கள் உடனடியாக அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அங்குள்ள ஊழியர்கள் அவரை பெங்களூருக்கு கொண்டு செல்லும்படி வலியுறுத்தி உள்ளனர். ஏனெனில் அவரால் தானாக சொந்தமாக மூச்சுவிட முடியவில்லை என்று கூறப்பட்டது. வென்டிலேட்டர் உதவியுடன் அவர் பெங்களூரு கொண்டு செல்லப்பட்டார். 






கோமாவில் இரண்டு நாள்


அவர் கோவிட்-19 தடுப்பூசியைப் பெறவில்லை என்று தனுஜின் சகோதரர் மூலம் கல்லூரி நிர்வாகத்திற்குத் தெரிவிக்கப்பட்டது. பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்,  இரண்டு நாட்கள் கோமா நிலையில் இருந்துள்ளார். அதன் பின் அவர் நேற்று (செவ்வாய்கிழமை) இறந்தார். மாரடைப்புதான் மரணத்திற்கு அதிகாரப்பூர்வ காரணம் என்று மருத்துவர்கள் கூறி உள்ளனர். அவரது சிகிச்சைக்காக கல்லூரி ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் பெற்றோருக்கு நிதியுதவி அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.