அசாமில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று பெற்ற நிலையில், கரிம்கன்ஜ் மாவட்டத்தில் நேற்று இரவு வந்த பாஜக வேட்பாளர் மனைவியின் வாகனத்தின் மீது சந்தேகம் கொண்டு அப்பகுதி மக்கள் சம்மந்தப்பட்ட காரை சிறைபிடித்தனர். காரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருந்தததால் ஆத்திரமடைந்த மக்கள், சம்மந்தப்பட்ட காரை அடித்து நொறுக்கினர். இதைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார், வாகனத்தையும் வாக்குபதிவு இயந்திரத்தையும் கைப்பற்றினர்.


 


இது தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்திய நிலையில், சற்று முன் விளக்கம் அளித்துள்ளது. அதன் படி, ‛வாக்கு பதிவு இயந்திரம் ஏற்றிச் சென்ற கார் பழுதானதால், மற்றொரு காரில் ‛லிப்ட்’ கேட்கப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரம் எடுத்துச் செல்லப்பட்டதாகவும், அதுவரை அது பாஜக வேட்பாளரின் மனைவியின் கார் என்பது தெரியாது என விளக்கம் அளித்துள்ள தேர்தல் ஆணையம், அஜாக்கிரதையாக செயல்பட்ட அதிகாரிகள் 4 பேரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருப்பதாக,’ தெரிவித்துள்ளது.